உபதேச ரத்தின மாலை – பாசுரம் 11

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 10 மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர் என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் – துன்னு புகழ் மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால் நான்மறையோர் கொண்டாடும் நாள்  பதினோராம் பாசுரம். மார்கழி மாதத்தில் கேட்டை நக்ஷத்ரத்தில் அவதரித்த, வேத தாத்பர்யம் அறிந்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பெருமையை வேதத்தில் சிறந்தவர்கள் கொண்டாடுவதை உலகத்தவர்களுக்கு எடுத்துரைக்கிறார். கண்ணன் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 9 கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர் வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் – ஆத்தியர்கள் அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின் நன்குடனே கொண்டாடும் நாள்  பத்தாம் பாசுரம். கார்த்திகைக்கு அடுத்து வருவது ரோஹிணி நக்ஷத்ரம் ஆகையாலே, கார்த்திகை மாதத்தில் ரோஹிணி நக்ஷத்ரத்தில் அவதரித்த திருப்பாணாழ்வார் பெருமையை உலகத்தவர்களுக்கு உபதேசிக்கிறார். ரோஹிணி நக்ஷத்ரம், கண்ணன் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 9

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 8 மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன் ஆறங்கம் கூற அவதரித்த – வீறுடைய கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்றென்று காதலிப்பார் வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து ஒன்பதாம் பாசுரம். இப்பாசுரத்தில் நம்மாழ்வாருக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் இருக்கும் அற்புதத் தொடர்பை விளக்கி, இந்தத் தினத்தைக் கொண்டாடுபவர்களின் திருவடிகளை வாழ்த்துமாறு தன் நெஞ்சுக்கு உபதேசிக்கிறார். … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 8

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 7 பேதை நெஞ்சே இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏது பெருமை இன்றைக்கு என்னென்னில் – ஓதுகின்றேன் வாய்த்த புகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த கார்த்திகையில் கார்த்திகை நாள் காண்    எட்டாம் பாசுரம். அவதார க்ரமத்தில் சொல்வதாக அறிவித்திருந்ததால், ஐப்பசி மாதத்துக்குப் பிறகு கார்த்திகையில் அவதரித்த திருமங்கை ஆழ்வாரைப் பற்றி அருளிச்செய்கிறார் அடுத்து. இரண்டு பாசுரங்களில் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 7

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 6 மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த – பெற்றிமையோர் என்று முதல் ஆழ்வார்கள் என்னும் பெயர் இவர்க்கு நின்றதுலகத்தே நிகழ்ந்து ஏழாம் பாசுரம். இவர்கள் செய்த பேருபகாரத்தால் இவர்களுக்கு முதலாழ்வார்கள் என்ற திருநாமம் நிலைத்து நின்றதை விளக்குகிறார். இவர்கள் ஏனைய ஆழ்வார்களுக்கு முன்பாக அவதாரம் செய்து, நல்ல தமிழ் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 6

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 5 ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்  பேசு புகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்  தேசுடனே தோன்று சிறப்பால்   ஆறாம் பாசுரம். முதலாழ்வார்களின் அவதார தினப் பெருமையை விளக்குகிறார்.   ஓ உலகத்தவர்களே! ஐப்பசி மாதத்தில் திருவோணம், அவிட்டம், சதயம் என்ற நாள்கள் ஒப்பற்றவை. ஏனெனில் எல்லா … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 5

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 4 அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் இந்த உலகில் இருள் நீங்க – வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மை மண்ணுலகோர் தாம் அறிய ஈதென்று சொல்லுவோம் யாம்  ஐந்தாம் பாசுரம். இப்படி அவதரித்த ஆழ்வார்களின் அவதார மாதங்களையும் திருநக்ஷத்ரங்களையும் அருளிச்செய்யத் தொடங்குகிறார். உயர்ந்த சாஸ்த்ரமான வேதங்களின் ஆழ்பொருளை ஆராய்ந்து அதன் சீரிய அர்த்தங்களை இந்த நில … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 4

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 3 பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை ஐயன் அருள் மாறன் சேரலர் கோன் – துய்ய பட்ட நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன் ஈதிவர் தோற்றத்து அடைவாம் இங்கு   நான்காம் பாசுரம். ஆழ்வார்களின் அவதார க்ரமத்தை அருளிச்செய்கின்றார் இங்கே.    பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், புகழ் பெற்ற திருமழிசைப் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 3

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 2 ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ் பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து   மூன்றாம் பாசுரம். தன் திருவுள்ளத்தை ஸமாதானம் செய்த பிறகு, பாசுரங்களை அருளிச்செய்வதாகத் திருவுள்ளம் கொண்டு, முதலிலே அமங்களங்கள் போகும்படியாக மங்களாசாஸனத்துடன் தொடங்குகிறார்.     ஆழ்வார்களுக்குப் பல்லாண்டு. … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 2

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 1 கற்றோர்கள் தாம் உகப்பர் கல்வி தன்னில் ஆசை உள்ளோர் பெற்றோம் என உகந்து பின்பு கற்பர் – மற்றோர்கள் மாச்சரியத்தால் இகழில் வந்ததென் நெஞ்சே இகழ்கை ஆச்சர்யமோ தான் அவர்க்கு  இரண்டாம் பாசுரம். மாமுனிகளின் திருவுள்ளம் “இதை விரும்பாதவர்கள் இதை இகழ மாட்டார்களோ?” என்று கேட்பதாகக் கொண்டு, அத்தாலே நமக்கு ஒரு குறையும் இல்லை … Read more