உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 19

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம்

கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்

ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் வேதத்துக்கு

ஓம் என்னும் அது போல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்த்

தான் மங்கலம் ஆதலால் 

பத்தொன்பதாம் பாசுரம். ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் திருப்பல்லாண்டுக்கு இருக்கும் ஏற்றத்தை ஒரு உதாரணத்தைக் கொண்டு அருளிச்செய்கிறார்.

எம்பெருமானைத் தவிர மற்ற உபாயங்களில் ஈடுபடுதல், எம்பெருமானை விரைவாக அடைவதில் முழு ஆசை இல்லாமல் இருத்தல் ஆகிய குற்றங்கள் இல்லாத ஆழ்வார்கள், பகவத் விஷயத்தைத் தவிர மற்ற விஷயங்களைப் பேசும் குற்றம் இல்லாத ப்ரபந்தங்களை அருளிச்செய்தனர். இப்படிப்பட்ட ப்ரபந்தங்களில் திருப்பல்லாண்டு, எம்பெருமானின் நன்மையையே பார்க்கும் மங்களாசாஸனத்திலேயே நோக்காக இருப்பதால், வேதத்தின் தாத்பர்யமாக ப்ரணவம் இருப்பது போல ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் இது ப்ரதானமாக இருக்கிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment