உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 13

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 12

மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண்ணுலகீர்
தேசு இத்திவசத்துக்கு ஏதென்னில் – பேசுகின்றேன்
கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள் 

பதிமூன்றாம் பாசுரம். அடுத்து மாசி மாதத்தில் புனர்பூஸ நக்ஷத்ரத்தில் அவதரித்த குலசேகராழ்வாரின் பெருமையை இவ்வுலகத்தில் உள்ள எல்லோரும் அறியும்படி அருளிச்செய்கிறார்.

உலகத்தவர்களே! மாசி மாதம் புனர்பூஸ நக்ஷத்ரத்துக்கு இருக்கும் பெருமை எதுவென்று நான் சொல்லுகிறேன் கேளுங்கள். கொல்லி நகரமான சேர தேசத்துக்குத் தலைவரான குலசேகரப் பெருமாள் அவதரித்த தினமாகையாலே, நல்லவர்கள் மிகவும் கொண்டாடக்கூடிய நாள் இன்று. இவர் பெருமாளான ஸ்ரீ ராமனிடத்தில் கொண்ட அளவிலாத பக்தியால், குலசேகரப் பெருமாள் என்றே அன்புடன் அழைக்கப்பட்டார். நல்லவர்கள் என்றால் வைஷ்ணவ நெறியிலே சிறந்து விளங்குபவர்கள், பரம ஸாத்விகர்கள், ஞான பக்தி வைராக்யங்களிலே சிறந்து விளங்குபவர்கள். நம் பூர்வாசார்யர்களைப் போலே ஆத்ம குண பூர்த்தியை உடையவர்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment