உபதேச ரத்தின மாலை – பாசுரம் 11

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 10

மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர்

என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் துன்னு புகழ்

மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்

நான்மறையோர் கொண்டாடும் நாள் 

பதினோராம் பாசுரம். மார்கழி மாதத்தில் கேட்டை நக்ஷத்ரத்தில் அவதரித்த, வேத தாத்பர்யம் அறிந்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பெருமையை வேதத்தில் சிறந்தவர்கள் கொண்டாடுவதை உலகத்தவர்களுக்கு எடுத்துரைக்கிறார். கண்ணன் எம்பெருமான் ஸ்ரீகீதையில் “மாதங்களில் நான் மார்கழி” என்று சொல்வது, இம்மாதத்திற்கு இருக்கும் ஒரு தனிச் சிறப்பு.ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை அருளிச்செய்ததும் இந்த மார்கழி மாதத்திலேயே. மார்கழியில் கேட்டைக்கு மற்றொரு ஏற்றமும் உண்டே. ஜகத்குருவான எம்பெருமானாருக்கும் ஆசார்யரான பெரிய நம்பியின் திருநக்ஷத்ரமும் இதுவே.

உலகத்தவர்களே! வைஷ்ணவமான மாதம் என்ற பெருமையைக் கொண்ட மார்கழியில், கேட்டை தினத்துக்கு என்ன பெருமை என்பதை உங்களுக்குச் சொல்லுகிறேன், கேளுங்கள். வேத தாத்பர்யமான கைங்கர்யத்தை அறிந்து அதில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டவரும் அதிலும் அடியார்களுக்கே அடிமை என்ற நிலையில் நின்றவருமான தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால், எம்பெருமானாரைப் போன்ற வேத விற்பன்னர்கள் கொண்டாடும் நாளாக இந்த நாள் வழங்கப்படுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment