உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 17

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம்

மாநிலத்தில் முன் நம் பெரியாழ்வார் வந்துதித்த
ஆனி தன்னில் சோதி என்றால் ஆதரிக்கும் – ஞானியர்க்கு
ஒப்போர் இல்லை இவ்வுலகு தனில் என்று நெஞ்சே
எப்பொழுதும் சிந்தித்திரு 

பதினேழாம் பாசுரம். பெரியாழ்வார் அவதரித்த ஆனி ஸ்வாதி என்றால் உருகக்கூடிய ஞானிகளுக்கு இவ்வுலகிலே வேறு எவரும் ஒப்பில்லை என்று தன் நெஞ்சுக்கு உரைக்கிறார்.

நெஞ்சே! முற்காலத்தில், இந்தப் பெருநிலமான பூமியிலே, பெரியாழ்வார் வந்துதித்த ஆனி ஸ்வாதி தினத்தைச் சொன்னால் நெஞ்சு உருகக்கூடிய ஞானிகளுக்கு இவ்வுலகில் ஒப்பானவர்கள் எவரும் இல்லை என்று எப்பொழுதும் நீ நினைத்திரு.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment