உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 16

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம்

இன்றைப் பெருமை அறிந்திலையோ ஏழை நெஞ்சே

இன்றைக்கு என் ஏற்றம் எனில் உரைக்கேன் நன்றி புனை

பல்லாண்டு பாடிய நம் பட்டர் பிரான் வந்துதித்த

நல்லானியில் சோதி நாள் 

பதினாறாம் பாசுரம். மற்றைய ஆழ்வார்களைவிட மிகுந்த பெருமையைப் பெற்றவரான பெரியாழ்வாரின் ஏற்றத்தை இப்பாசுரம் தொடக்கமாக ஐந்து பாசுரங்களில் வெளியிடுகிறார். இப்பாசுரத்திலே பெரியாழ்வார் அவதரித்த ஆனியில் சோதி நன்னாளின் பெருமையை தன்னடைய திருவுள்ளத்துக்கு அருளிச்செய்கிறார்.

மற்றைய ஆழ்வார்களின் திருநக்ஷத்ரங்களிலே சபல புத்தி உடைய நெஞ்சமே! இந்த ஆனி மாதம் ஸ்வாதி நன்னாளின் பெருமை உனக்குத் தெரியுமா? நான் சொல்லுகிறேன் கேள். மங்களாசாஸனம் என்ற உயர்ந்த தாத்பர்யத்தை தன்னுள் கொண்டுள்ள திருப்பல்லாண்டை அருளிச்செய்த பட்டர்பிரான் அவதரித்த தினம் ஆகையாலே இது ஒரு சிறந்த நாள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment