உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 28

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 27 ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்  வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் – ஏழ் பாரும் உய்ய எதிராசர் உதித்தருளும் சித்திரையில் செய்ய திருவாதிரை இருபத்தெட்டாம் பாசுரம். இந்த நன்னாளான சித்திரையில் திருவாதிரை, ஆழ்வார்களின் திருநக்ஷத்ர தினங்களைக் காட்டிலும் நமக்கு மிகவும் முக்யம் என்பதை எல்லோரும் அறியும்படி அருளிச்செய்கிறார். உலகத்தவர்களே! சித்திரையில் திருவாதிரை தினமாவது ஆழ்வார்களின் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 27

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள் என்றையினும் இன்று இதனுக்கு ஏற்றம் என் தான் – என்றவர்க்குச் சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால் நாற்றிசையும் கொண்டாடும் நாள்  இருபத்தேழாம் பாசுரம். இனி ஆழ்வார்களுக்கு ஒப்பான பெருமையைப் பெற்ற, அவர்களுக்கு சேஷபூதரான, மற்றெல்லோருக்கும் நாதரான எம்பெருமானாரின் திருநக்ஷத்ர வைபவத்தை மூன்று பாசுரங்களில் அனுபவிக்கிறார்.  இப்பாசுரத்தில் எம்பெருமானார் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 26

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 25 வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல் சீர்த்த மதுரகவி செய் கலையை – ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே  சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து  இருபத்தாறாம் பாசுரம். ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு அர்த்தங்களை நிர்ணயமாகக் காட்டிக் கொடுத்த ஆசார்யர்கள் இவருடைய திவ்ய ப்ரபந்தத்தின் பெருமையை ஆராய்ந்து அருளிச்செயலின் மத்தியிலே இதைச் சேர்த்தார்கள் என்பதை ஒரு … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 25

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த சீராரும் சித்திரையில் சித்திரை நாள் – பாருலகில் மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும் உற்றதெமக்கென்று நெஞ்சே ஓர்  இருபத்து ஐந்தாம் பாசுரம். இப்பொழுது இரண்டு பாசுரங்களில் மதுரகவி ஆழ்வார் வைபவத்தை அருளிச்செய்கிறார். இதில், ஆழ்வார் அவதரித்த சித்திரையில் சித்திரை நாள் மற்றைய ஆழ்வார்கள் அவதரித்த நாள்களைக் காட்டிலும் பெருமை பெற்றது … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 24

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து  இருபத்து நான்காம் பாசுரம். ஆழ்வார்களைக் காட்டிலும் மிகுந்த பெருமையைப் பெர்ற்றவளான ஆண்டாளைக் கொண்டாடுமாறு தன் திருவுள்ளத்துக்கு அருளிச்செய்கிறார். ஆழ்வார்களின் குடிக்கு ஒரே வாரிசாக வந்து அவதரித்தாள் ஆண்டாள். அஞ்சு … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 23

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் பெரியாழ்வார் பெண் பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒரு நாளைக்கு உண்டோ மனமே உணர்ந்து பார் ஆண்டாளுக்கு உண்டாகில் ஒப்பிதற்கும் உண்டு  இருபத்துமூன்றாம் பாசுரம். ஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூரத்துக்கு வேறு ஒன்று ஒப்பாக இல்லாத தன்மையால் வந்த பெருமையைத் தன்னுடைய நெஞ்சுக்கு அருளிச்செய்கிறார். நெஞ்சே! பெரியாழ்வாரின் திருமகளாக ஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூரத்துக்கு … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 22

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத வாழ்வான வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து ஆழ்வார் திருமகளாராய்  இருபத்திரண்டாம் பாசுரம். ஆண்டாள் நாச்சியாரின் திருவவதாரம் தனக்காகவே என்று மிகவும் அனுபவித்து அருளிச்செய்கிறார். இன்றுதான் திருவாடிப்பூரமோ? இந்த தினத்திலேதான் ஸ்ரீ பூமிப்பிராட்டி ஸ்ரீவைகுந்தத்தில் இருக்கும் எல்லையில்லாத ஆனந்த அனுபவத்தை விட்டு, பெரியாழ்வாரின் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 21

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் எதிராசராம் இவர்கள் – வாழ்வாக வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்  இந்த உலகோர்க்கு உரைப்போம் யாம்  இருபத்தொன்றாம் பாசுரம். ஆழ்வார்கள் பதின்மர் என்பதும் உண்டு பன்னிருவர் என்பதும் உண்டு. எம்பெருமான் விஷயத்திலே ஆழ்ந்தவர்களை மட்டும் பார்த்தால், இவர்கள் பதின்மர்கள். இவர்களுடைய மாத, நக்ஷத்ரங்களை நன்றாகக் காட்டியருளினார் கீழே. … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான் உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பொருவர் – தண் தமிழ் நூல் செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய் கலையில் பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்  இருபதாம் பாசுரம். இன்னமும் பெரியாழ்வார் மற்றும் அவருடைய ப்ரபந்தமான திருப்பல்லாண்டுக்கும் இருக்கக் கூடிய தனிப் பெருமையை அருளிச்செய்கிறார். சிறுபிள்ளைத்தனமான நெஞ்சே! ஈரத்தமிழிலே எம்பெருமானின் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 19

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம் ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் – வேதத்துக்கு ஓம் என்னும் அது போல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்த் தான் மங்கலம் ஆதலால்  பத்தொன்பதாம் பாசுரம். ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் திருப்பல்லாண்டுக்கு இருக்கும் ஏற்றத்தை ஒரு உதாரணத்தைக் கொண்டு அருளிச்செய்கிறார். எம்பெருமானைத் தவிர மற்ற உபாயங்களில் ஈடுபடுதல், எம்பெருமானை விரைவாக அடைவதில் முழு ஆசை இல்லாமல் … Read more