உபதேச ரத்தின மாலை – பாசுரம் 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 9

கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர்

வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் ஆத்தியர்கள்

அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின்

நன்குடனே கொண்டாடும் நாள் 

பத்தாம் பாசுரம். கார்த்திகைக்கு அடுத்து வருவது ரோஹிணி நக்ஷத்ரம் ஆகையாலே, கார்த்திகை மாதத்தில் ரோஹிணி நக்ஷத்ரத்தில் அவதரித்த திருப்பாணாழ்வார் பெருமையை உலகத்தவர்களுக்கு உபதேசிக்கிறார். ரோஹிணி நக்ஷத்ரம், கண்ணன் எம்பெருமான் திருநக்ஷத்ரமாகவும், ஆழ்வார்களில் திருப்பாணாழ்வார் திருநக்ஷத்ரமாகவும், ஆசார்யர்களில் திருக்கோஷ்டியூர் நம்பி திருநக்ஷத்ரமாகவும் இருப்பதால், முப்புரியூட்டினதாகக் (மூன்று மடங்கு ஏற்றம் பெற்றதாக) கொண்டாடப்படுகிறது.

உலகத்தவர்களே! பாருங்கள், இன்று கார்த்திகையில் ரோஹிணி நன்னாள். இன்றைய தினமே பொருந்திய புகழை உடைய திருப்பாணாழ்வார் அவதரித்ததால், வேதத்தை மதிக்கும் ஆஸ்திகர்கள் இவ்வாழ்வார் அருளிய அமலனாதிபிரானைக் கற்றதற்பின், அது வேதத்தின் ஸாரமான விஷயமான ஸதா பச்யந்தி (எம்பெருமானையே எப்பொழுதும் கண்டு கொண்டிருப்பதை) என்ற விஷயத்தை பத்தே பாசுரங்களில் அழகாக விளக்குவதை உணர்ந்து, அவர்களால் மிகவும் கொண்டாடப்படும் நாள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment