உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 12

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 11

தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்

தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் துய்ய மதி

பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று

நற்றவர்கள் கொண்டாடும் நாள் 

பன்னிரண்டாம் பாசுரம். அடுத்து தை மாதத்தில் மக நக்ஷத்ரத்தில் அவதரித்த திருமழிசை ஆழ்வாரின் பெருமையை இவ்வுலகத்தில் உள்ள எல்லோரும் அறியும்படி அருளிச்செய்கிறார்.

உலகத்தவர்களே! தை மாதத்தில் மக நக்ஷத்ரம் மிகவும் ஏற்றம் வாய்ந்தது. இதற்கு என்ன ஏற்றம் என்பதை நான் விளக்குகிறேன் கேளுங்கள். தூய்மையான ஞானத்தைப் பெற்ற திருமழிசைப் பிரான் அவதரித்த தினமாகையாலே, உயர்ந்த தபஸ்ஸை உடையவர்களால் மிகவும் கொண்டாடப்படும்.

ஞானத்தின் தூய்மை என்னவென்றால் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றதும், இதர தேவதைகளிடத்தில் சிறிதும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதும். இவருக்கும் திருக்குடந்தை ஆராவமுதன் எம்பெருமானுக்கும் இருந்த அந்யோன்ய பாவத்தாலே, இவர் திருமழிசைப் பிரான் என்றும் அவர் ஆராவமுத ஆழ்வார் என்றும் அழைக்கப்படுகிறார்கள். உயர்ந்த தபஸ்ஸை உடையவர்கள் என்றால் சரணாகதி என்ற தபஸ்ஸையும் ஆசார்ய நிஷ்டை என்ற தபஸ்ஸையும் உடைய கணிகண்ணன், பெரும்புலியூர் அடிகள், எம்பெருமானார் போன்றவர்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment