ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான்
உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பொருவர் – தண் தமிழ் நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய் கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்
இருபதாம் பாசுரம். இன்னமும் பெரியாழ்வார் மற்றும் அவருடைய ப்ரபந்தமான திருப்பல்லாண்டுக்கும் இருக்கக் கூடிய தனிப் பெருமையை அருளிச்செய்கிறார்.
சிறுபிள்ளைத்தனமான நெஞ்சே! ஈரத்தமிழிலே எம்பெருமானின் நிர்ஹேதுகமான க்ருபையினால் பாசுரங்கள் அருளிச்செய்த ஆழ்வார்களையும் அவர்களின் அருளிச்செயல்களையும் நன்றாக ஆராய்ந்து பார். திருப்பல்லாண்டுக்கு ஒப்பான ஒரு ப்ரபந்தம் உள்ளதா? இல்லை. எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுவதையே நோக்காகக் கொண்டுள்ளது திருப்பல்லாண்டு. மற்றைய ஆழ்வார்களின் ப்ரபந்தங்களோ, எம்பெருமானை உருகி அனுபவிப்பதில் நோக்காக உள்ளன. பெரியாழ்வாருக்கு ஒப்பான ஒரு ஆழ்வார் உள்ளாரா? இல்லை. எம்பெருமானின் அழகு முதலியவைகளுக்கு மங்களாசாஸனம் செய்து தரித்து கொள்ளுபவர் இவ்வாழ்வார். மற்றைய ஆழ்வார்களோ எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களில் மூழ்கியிருப்பவர்கள்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org