உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 27

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம்

இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள்

என்றையினும் இன்று இதனுக்கு ஏற்றம் என் தான் என்றவர்க்குச்

சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம் பிறப்பால்

நாற்றிசையும் கொண்டாடும் நாள் 

இருபத்தேழாம் பாசுரம். இனி ஆழ்வார்களுக்கு ஒப்பான பெருமையைப் பெற்ற, அவர்களுக்கு சேஷபூதரான, மற்றெல்லோருக்கும் நாதரான எம்பெருமானாரின் திருநக்ஷத்ர வைபவத்தை மூன்று பாசுரங்களில் அனுபவிக்கிறார்.  இப்பாசுரத்தில் எம்பெருமானார் அவதரித்த சித்திரையில் திருவாதிரைத் திருநாளின் ஏற்றத்தை உலகத்தாருக்கு நன்றாக அறிவிக்கிறார்.

உலகத்தவர்களே! இன்று சித்திரை மாதத்தில் சிறந்த நாளான திருவாதிரை நன்னாள். ஏனைய நாட்களைவிட இந்நாளுக்கு உண்டான ஏற்றம் என்ன என்று கேட்பர்களுக்கு நான் சொல்லுகிறேன், கேளுங்கள். யதிகட்கு இறைவனான எம்பெருமானார் திருவவதாரத்தாலே, நான்கு திசைகளிலும் இருக்கும் மக்களும் கொண்டாடும் ஏற்றத்தைப் பெற்ற நாள் இன்று.

மணவாள மாமுனிகள் தாமே ஆர்த்தி ப்ரபந்தத்தில் “அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச மாமுனிவா” என்று எம்பெருமானாரை அழைக்கிறார். எம்பெருமானார் அவதாரத்தாலே உலகத்தில் உள்ளவர் எல்லோரும் எம்பெருமானார் மூலமாகவே எம்பெருமானை அடைந்து உஜ்ஜீவனத்தைப் பெறலாம் என்பது திண்ணமாயிற்று. இப்படிப்பட்ட பெருமையை இவர் பெற்றிருப்பதாலே, இவர் அவதரித்த நாள் உலகத்தில் உள்ள அனைவராலும் இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment