உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 22

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம்

இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக

அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் குன்றாத

வாழ்வான வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து

ஆழ்வார் திருமகளாராய் 

இருபத்திரண்டாம் பாசுரம். ஆண்டாள் நாச்சியாரின் திருவவதாரம் தனக்காகவே என்று மிகவும் அனுபவித்து அருளிச்செய்கிறார்.

இன்றுதான் திருவாடிப்பூரமோ? இந்த தினத்திலேதான் ஸ்ரீ பூமிப்பிராட்டி ஸ்ரீவைகுந்தத்தில் இருக்கும் எல்லையில்லாத ஆனந்த அனுபவத்தை விட்டு, பெரியாழ்வாரின் திருமகளாரான ஆண்டாள் நாச்சியாராக, ஒரு தாய் தன் குழந்தை கிணற்றிலே விழுந்தால், எவ்வாறு தானே கிணற்றிலே குதித்துத் தன் குழந்தையை காப்பாற்றுவாளோ, அதைப் போல என்னுடைய உஜ்ஜீவனத்துக்காகவே இங்கே வந்து அவதரித்தாள். ஸ்ரீ வராகப் பெருமாள் பூமிப்பிராட்டியிடம் என்னை வாயினால் பாடி, மனத்தினால் த்யானித்து,தூயமலர்களைக் கொண்டு அர்ச்சித்தால், ஜீவாத்மாக்கள் என்னை எளிதில் அடையலாம்” என்று சொன்னதை நமக்கு நடத்திக் காட்டவே இப்பூவுலகில் வந்து அவதரித்தாள். என்ன ஆச்சர்யம்! என்ன கருணை!

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment