உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 23

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம்

பெரியாழ்வார் பெண் பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒரு நாளைக்கு
உண்டோ மனமே உணர்ந்து பார் ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பிதற்கும் உண்டு 

இருபத்துமூன்றாம் பாசுரம். ஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூரத்துக்கு வேறு ஒன்று ஒப்பாக இல்லாத தன்மையால் வந்த பெருமையைத் தன்னுடைய நெஞ்சுக்கு அருளிச்செய்கிறார்.

நெஞ்சே! பெரியாழ்வாரின் திருமகளாக ஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூரத்துக்கு ஒப்பாக ஒரு நாள் உண்டோ என்று ஆராய்ந்துபார். ஆண்டாள் நாச்சியாருக்கு ஒப்பாக ஒருவர் இருந்தாலன்றோ இந்நாளுக்கு ஒரு ஒப்பு உண்டு.

ஆண்டாள் நாச்சியார் பூமிப்பிராட்டியின் அவதாரம். ஆத்மாக்கள் மீது பெரும் கருணை கொண்டு, எம்பெருமானுடைய அனுபவத்தை விட்டு, இவ்வுலகில் வந்து அவதரித்தாள். ஆழ்வார்களோ இவ்வுலகிலே இருந்தவர்கள். எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே குற்றமற்ற அறிவையும் பக்தியையும் பெற்று எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்தார்கள். தான் இருந்த உயர்ந்த நிலையை மற்றவர்களுக்காகத் த்யாகம் செய்த ஆண்டாளுக்கு ஒப்பாக வேறு யாரையும் சொல்ல முடியாது. இப்படி ஒப்புயர்வற்ற ஆழ்வார்களே ஆண்டாளுக்கு ஒப்பில்லை என்றால் வேறு எவர் ஒப்பாக முடியும். இதனாலேயே ஆண்டாளின் திருநக்ஷத்ரத்துக்கும் ஒப்பாக வேறொன்று இல்லை.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment