கண்ணிநுண் சிறுத்தாம்பு – எளிய விளக்கவுரை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: முதலாயிரம் நம்மாழ்வாரும் மதுரகவி ஆழ்வாரும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பின் பெருமையை உபதேச ரத்தின மாலை 26ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல் சீர்த்த மதுரகவி செய் கலையை – ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து சொற்களின் பூர்த்தியும் பொருளின் பூர்த்தியும் நிரம்பப் பெற்றதான பெரிய திருமந்த்ரம் என்று … Read more