உபதேச ரத்தின மாலை – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

பிள்ளை லோகாசார்யர் – மணவாள மாமுனிகள் (ஸ்ரீபெரும்பூதூர்)

e-book – https://1drv.ms/b/s!AoGdjdhgJ8HehlXSi5O5mVNIyKdv?e=wCPDGq

விசதவாக் சிகாமணியான நம் மணவாள மாமுனிகள் திருவாய் மலர்ந்தருளிய ஒரு அற்புதத் தமிழ் ப்ரபந்தம் உபதேச ரத்தின மாலை. இது பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் சீரிய நற்பொருளை ரத்தினச் சுருக்கமாக விளக்கும் ஒரு அற்புதப் படைப்பு. ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் ஸாரமான அர்த்தமாவது “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்” என்பதே. அதாவது ஒரு ஆசார்யன் தன்னை அண்டி வந்த சிஷ்யன் மீது கருணை கொண்டு அவனுடைய உஜ்ஜீவனத்தைப் பெற்றுத் தருதல். இதுவே மிகச் சிறந்த மற்றும் எளிய உபாயமாக நம் ஆசார்யர்களால் கொண்டாடப்பட்டுள்ளது. ஜீவனம் என்றால் தேஹத்தைப் பாதுகாத்து வளர்ப்பது. உஜ்ஜீவனம் என்றால் ஆத்மாவுக்குத் தகுந்ததான நல் வழியைத் தேடுவது. ஆத்மாவின் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த பேறு பரமபதத்தில் எம்பெருமானைச் சேர்ந்து, அடியார் குழாங்களுடன் கூடி இருந்து அவனுக்கு நித்ய கைங்கர்யம் செய்வதே.

ஒரு க்ரந்தத்தின் உட்பொருளை விளக்க முற்படும்போது அது தொடர்புடைய விஷயங்களைச் சேர்த்து விளக்குவது பொதுவான க்ரமம். இம்முறையில், மாமுனிகளும் தான் இவ்விஷயங்களைக் கற்ற ஆசார்யரை வணங்கி, முதலில் ஆழ்வார்களுடைய திருவவதார க்ரமம், அவர்கள் திருவவதார ஸ்தலங்கள், ஆழ்வார்கள் வழியில் வந்த ஆசார்யர்களின் அறிமுகம், அவ்வாசார்யர்களின் குலக்கொழுந்தாகக் கருதப்பட்ட எம்பெருமானார் அனைத்துலகையும் வாழ வைத்த வைபவம், அவரை நம்பெருமாள் பெருமைப்படுத்தி நம் ஸம்ப்ரதாயத்தை எம்பெருமானார் தரிசனம் என்று பேரிட்ட வைபவம், நம் ஸம்ப்ரதாயத்தின் ஆணி வேரான திருவாய்மொழிக்கு அமைந்த வ்யாக்யானங்கள், நம்பிள்ளை வைபவம், நம்பிள்ளை சிஷ்யரான வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரரான பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷணத்தின் மேன்மைகள், அதன் உட்பொருள், அதை அனுஷ்டித்த அதிகாரிகள் வைபவம் ஆகியவற்றை விளக்கி இறுதியாக பூர்வாசார்யர்களின் ஞானமும் அனுஷ்டானமுமே நமக்கு ஒவ்வொரு நாளும் மனதில் கொண்டு வாழ வேண்டியவை என்று காட்டி, இப்படி வாழ்பவர்கள் அனைத்துலகும் வாழப்பிறந்த எதிராச மாமுனியாம் எம்பெருமானாரின் திருவருளுக்குப் பரிபூர்ணமாக இலக்காவர்கள் என்று அருளி ப்ரபந்தத்தைத் தலைக்கட்டி அருளுகிறார்.

இதன் இறுதியில் எறும்பி அப்பா அருளிய ஒற்றுப் பாசுரமும் சேர்த்தே அனுஸந்திக்கப்படுகிறது. இந்தப் பாசுரத்தில், எறும்பி அப்பா “மாமுனிகளின் திருவடிகளிலே ஸம்பந்தம் உடையவர்கள் எம்பெருமானாலே கைக்கொள்ளப்படுவது திண்ணம்” என்று அருளிச்செய்கிறார்.

இப்படி மிகவும் மேன்மை பொருந்திய இந்த ப்ரபந்தத்துக்கு ஒரு எளிய விளக்கவுரையை அளிக்கும் முயற்சி இது. இந்த எளிய விளக்கவுரை உபதேச ரத்தின மாலைக்குப் பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வ்யாக்யானத்தைத் துணையாகக் கொண்டு எழுதப்படுகிறது.  இதைப் பரிசோதித்துக் கொடுத்த ஸ்ரீ ரெங்கஸ்வாமி ஐயங்காருக்கு அடியேனுடைய நன்றிகள் உரித்தாயிடுக.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “உபதேச ரத்தின மாலை – எளிய விளக்கவுரை”

Leave a Comment