உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 29

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 28

எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா

வந்துதித்த நாள் என்னும் வாசியினால் இந்தத்

திருவாதிரை தன்னின் சீர்மை தனை நெஞ்சே

ஒருவாமல் எப்பொழுதும் ஓர் 

இருபத்தொன்பதாம் பாசுரம். இந்த நன்னாளான சித்திரையில் திருவாதிரையின் வைபவத்தை எப்பொழுதும் நினைத்திரு என்று தன் நெஞ்சைக் குறித்து அருளிச்செய்கிறார்.

நெஞ்சே! எமக்கு ஸ்வாமியான யதிராஜர் இந்த உலகத்திலே வந்துதித்த பெருமை பெற்ற நாளான சித்திரையில் திருவாதிரையின் சிறப்பைத் தவறாமல் எக்காலத்திலும் ஆராய்ந்து அனுபவிக்கவும்.

முந்தைய பாசுரங்களில் உலகத்தவர்களுக்கு உபதேசித்தார். இப்பாசுரத்திலே தானே இந்த நன்னாளின் வைபவத்தில் ஈடுபட்டு அனுபவிக்கிறார். எம்பெருமானார் தாமே “அகில ஜகத் ஸ்வாமின்! அஸ்மத் ஸ்வாமின்” (எல்லா உலகுக்கும் நாதனே! எனக்கு நாதனே!) என்று எம்பெருமான் விஷயமாக ஸ்ரீகத்யத்தில் அனுபவித்ததைப் போலே, இவரும் கீழ்ப் பாசுரங்களில் எம்பெருமானார் உலகுக்குச் செய்த நன்மையை அனுபவித்து, இப்பாசுரத்தில் தனக்குச் செய்த நன்மையை அனுபவிக்கிறார்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment