உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 67

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 66

ஆசாரியர்கள் அனைவரும் முன் ஆசரித்த

ஆசாரம் தன்னை அறியாதார் பேசுகின்ற

வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள்

சீர்த்த நிலை தன்னை நெஞ்சே சேர் 

அறுபத்தேழாம் பாசுரம். நீரோ “ஆசார்யனே எல்லாம் என்று இருக்கச் சொல்லுகிறீர். ஆனால் வேறு சிலரோ எம்பெருமானே எல்லாம் என்று இருக்கச் சொல்லுகிறார்கள், இதில் எது உண்மை?” என்று தன் திருவுள்ளம் கேட்பதாகக் கொண்டு அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

நெஞ்சே! நம்முடைய பூர்வாசார்யர்கள், அதாவது ஸ்ரீ மதுரகவிகள், ஸ்ரீமந்நாதமுனிகள் தொடக்கமான ஆசார்யர்கள் அனைவரும் ஆசார்ய பக்தியிலேயே திளைத்திருந்தார்கள். அப்படிப்பட்டவர்களின் ஆசாரத்தை, அதாவது நடத்தையை அறியாதவர்கள் சொல்லுகின்ற உபதேசங்களைக் கேட்டுக் கலங்காதே. நம்முடைய பூர்வாசார்யர்கள் கொண்டிருந்த உயர்ந்ததான நிலையை நீயும் அடை.

எம்பெருமானை அடிபணிந்து இருப்பது என்பது முதல் நிலை. ஆசார்யனை அடிபணிந்து இருப்பது என்பது எல்லையான நிலை. நம் ஆசார்யர்கள், இந்த எல்லையான நிலையில் இருப்பதையே விரும்பி அனுஷ்டித்தார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment