உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 71

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 70

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு

பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே தன் நெஞ்சில்

தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேசவர

வாற்றதென்பர் மூர்க்கர் ஆவார் 

எழுபத்தோறாம் பாசுரம். கீழ்ப் பாசுரங்களில் பார்த்த அனுகூலர்கள் மற்றும் ப்ரதிகூலர்களின் உபதேசங்கள் எப்படிப்பட்டவை என்று அருளிச்செய்கிறார்.

முன்னோர்களான ஸ்ரீமந்நாதமுனிகள் தொடக்கமான பூர்வாசார்யர்களின் உபதேச க்ரமத்திலே அடிபணிந்து கேட்டு அந்த அர்த்தங்களை நன்றாக ஆராய்ந்து பார்த்து, தாமும் அதே க்ரமத்திலே உபதேசம் செய்யாமல், தங்களுடைய நெஞ்சிலே தோன்றிய அர்த்தங்களை மற்றவர்களுக்கு உபதேசித்து, அதற்கு மேலும், நான் சொன்ன அர்த்தங்கள் சுத்த ஸம்ப்ரதாய பரம்பரயிலே சொல்லப்பட்ட அர்த்தங்களே என்று பொய்யுரைப்பவர்கள் மூர்க்கர்கள்.

மூர்க்கன் என்றால் அறிவிலி என்று அர்த்தம். நம்முடைய ஆசார்யர்கள், பரம்பரையாக, ஸத் ஸம்ப்ரதாய அர்த்தங்களைப் பேசிற்றே பேசும் ஏககண்டர்களாக அருளிச்செய்துள்ளனர். அந்த உயர்ந்த ஸ்ரீஸூக்திகளைக் கொள்ளாமல், தாங்களாகவே புதிது புதிதான அர்த்தங்களைக் கற்பிப்பவர்கள் ஆசார்ய பக்தியும், சாஸ்த்ர ஞானமும், ஸத் ஸம்ப்ரதாய ஞானமும் இல்லாத அறிவிலிகளே.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment