உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 73

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 72

இந்த உபதேச ரத்தின மாலை தன்னைச்

சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் எந்தை

எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச்

சதிராக வாழ்ந்திடுவர் தாம் 

எழுபத்துமூன்றாம் பாசுரம். இந்த ப்ரபந்தத்தைக் கற்று அனுபவிப்பவர்களுக்கானப் பலனைச் சொல்லி ப்ரபந்தத்தை முடித்தருளுகிறார்.

பூர்வாசார்யர்களின் உபதேச ஸாரத்தை எடுத்துரைத்த இந்த உபதேச ரத்தின மாலை என்னும் ப்ரபந்தத்தைத் தங்கள் சிந்தையிலே எப்பொழுதும் வைத்திருப்பவர்கள், என்னுடைய ஸ்வாமியான யதிராஜராம் எம்பெருமானாரின் இனியதான கருணைக்கு இலக்காகிச் சிறப்பாக வாழ்வார்கள்.

ஆழ்வார்கள் திருவவவதார க்ரமம், அவர்கள் திருவவதார ஸ்தலங்கள், அவர்களின் அருளிச்செயல்களுக்கு ஆசார்யர்கள் இட்டருளிய வ்யாக்யானங்கள், அந்த அருளிச்செயல்கள் மற்றும் வ்யாக்யானங்களின் ஸாரமான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் பெருமைகளும் அதில் காட்டப்பட்ட “ஆசார்ய அபிமானம்” என்ற உயர்ந்த கொள்கை ஆகியவற்றை எப்பொழுதும் சிந்தனை செய்பவர்கள், காரேய் கருணை இராமானுசனின் கருணையாலே இவ்வுலகிலும் கைங்கர்யஸ்ரீயுடன் வாழ்ந்து, பிறகு மேலான நித்ய கைங்கர்யத்தையும் பெற்று வாழ்ச்சி அடைவார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment