உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 69

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 68

நல்ல மணம் உள்ளதொன்றை நண்ணி இருப்பதற்கு

நல்ல மணம் உண்டாம் நலம் அது போல் நல்ல

குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்

குணம் அதுவேயாம் சேர்த்தி கொண்டு 

அறுபத்தொன்பதாம் பாசுரம். அனுகூலர்களுடன் பழகுவதால் ஏற்படும் நன்மையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கி அருளுகிறார்.

நல்ல மணத்துடன் கூடியிருக்கும் ஒரு பொருளுடன் கூடினால் அந்த நல்ல மணத்தைத் தானும் பெறுவதைப்போலே ஸத்வ குணம் கொண்டவர்களுடன் கூடியிருந்தால், அந்தச் சேர்க்கையினாலேயே நல்ல குணமானது ஏற்படும்.

நல்ல குணம் என்பது சேஷத்வ ஞானம், பகவத், பாகவத ஆசார்ய பக்தி, இதர விஷயங்களில் வைராக்யம் போன்றவைகள். ஒரு நிலத்திலே நீர் நிரம்பி இருந்தால் அது அருகில் இருக்கும் நிலங்களிலும் வழியுமாபோலே, உயர்ந்த குணங்களை உடையவர்களுடன் நாம் பழகினால் நமக்கும் அந்த குணங்கள் ஏற்படும். நம் ஸம்ப்ரதாயத்தின் மிக முக்யமான கொள்கை “ஒரு பாகவதனை அண்டி அவன் திருவடி நிழலின் கீழே வாழ்தல்”.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment