உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 55

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 54

ஆர் வசன பூடணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார்

ஆரது சொல் நேரில் அனுட்டிப்பார் ஓரொருவர்

உண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும்

அண்டாததன்றோ அது 

ஐம்பத்தைன்தாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தின் அர்த்தத்தை நன்றாக அறிந்தவர்களும் அறிந்தபடி வாழ்பவர்களும் காண்பது அரிது என்று தன் நெஞ்சுக்கு உரைக்கிறார்.

நெஞ்சே! இந்த ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் உட்பொருளை எல்லாம் நன்றாக அறிந்தவர்கள் ஆருளர்? இதில் சொன்ன க்ரமத்திலே வாழ்பவர்கள் தான் ஆருளர்? இப்படி இந்த அர்த்தங்களை அறிந்து அதன்படி நடப்பவர்கள் எங்கோ ஓரிருவர் இருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்.எல்லோர்க்கும் இந்த நிலை வருவது துர்லபம் அன்றோ? கடலிலே முத்துக்கள் ரத்னங்கள் என்று பல இருந்தாலும் உள்ளே மூழ்கி அவைகளை எடுக்கக்கூடியவர்கள் சிலரே இருப்பர். கரையிலிருந்து காண்பவர்கள் அதிகமாக இருப்பர். இதே போல, மேலோட்டமாக இந்த க்ரந்தத்தின் அர்த்தங்களை அறிந்தவர்கள் பலர் இருந்தாலும் உள் அர்த்தங்களை அறிந்தவர்கள் சிலரே இருப்பர். அப்படி உள் அர்த்தங்களை அறிந்திருந்தாலும், சாஸ்த்ரத்திலே விதித்த போக விஷயங்களில் விரக்தியுடன் இருத்தல், குற்றம் செய்தவர்களிடத்தில் கருணை காட்டுதல், ஆசார்யன் திருவடியே எல்லாம் என்று இருத்தல் ஆகிய விஷயங்களை அனுஷ்டானத்திலே கொண்டிருப்பவர்கள் வெகு சிலரே இருப்பர்,

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment