ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த – வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்றென்று காதலிப்பார்
வாய்த்த மலர்த் தாள்கள் நெஞ்சே வாழ்த்து
ஒன்பதாம் பாசுரம். இப்பாசுரத்தில் நம்மாழ்வாருக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் இருக்கும் அற்புதத் தொடர்பை விளக்கி, இந்தத் தினத்தைக் கொண்டாடுபவர்களின் திருவடிகளை வாழ்த்துமாறு தன் நெஞ்சுக்கு உபதேசிக்கிறார்.
நெஞ்சமே! நான்கு வேதங்களுக்கு ஸமமாக நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு ப்ரபந்தங்களுக்கு, அந்த வேதங்களுக்கு ஆறு அங்கங்கள் இருப்பதுபோல, ஆறு அங்கங்களாக ஆறு ப்ரபந்தங்களை அருளிச்செய்யவே திருமங்கை ஆழ்வார் கார்த்திகையில் கார்த்திகை நன்னாளில் அவதரித்தார். இந்த நாளை மிகவும் விரும்புபவர்களின் சிறந்த திருவடித் தாமரைகளை வாழ்த்து.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
Pingback: upadhEsa raththina mAlai – Simple Explanation – pAsurams 7 to 9 | dhivya prabandham