உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 52

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 51

பின்னை வடக்குத் திருவீதிப் பிள்ளை அன்பால்

அன்ன திருநாமத்தை ஆதரித்து மன்னு புகழ்

மைந்தர்க்குச் சாற்றுகையால் வந்து பரந்தது எங்கும்

இந்தத் திருநாமம் இங்கு 

ஐம்பத்திரண்டாம் பாசுரம். இந்த லோகாசார்யர் என்னும் திருநாமம் உலகெங்கும் பரவியதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்.

முன் பாசுரத்தில் கண்ட சரித்ரத்துக்குப் பிற்பாடு, நம்பிள்ளையின் ப்ரிய சிஷ்யரான வடக்குத் திருவீதிப் பிள்ளை தன் ஆசார்யன் திருநாமமான “லோகாசார்யர்” என்ற திருநாமத்தின் மீதிருந்த அன்பால் தன் ஆசார்யனின் அருளாலே தனக்குப் பிறந்த, பொருந்திய பெருமைகளைக் கொண்ட திருக்குமாரருக்கு “பிள்ளை லோகாசார்யர்” என்ற திருநாமத்தைச் சூட்ட, இந்தத் திருநாமம் உலகெங்கும் மேலும் ப்ரஸித்தி பெற்றது. மாமுனிகள் தாமும் “வாழி உலகாசிரியன்” என்றே மிகவும் ஆதரத்துடன் பிள்ளை லோகாசார்யரைக் கொண்டாடுகிறார். பிள்ளை லோகாசார்யர் தன்னுடைய பெரும் கருணையாலே ரஹஸ்ய க்ரந்தங்களை உலகத்தவர்கள் அனைவரும் அறிந்து உஜ்ஜீவிக்கும்படி ஏடுபடுத்தியருள, இதனாலேயே இவர் திருநாமமும் உலகத்தாராலே மிகவும் கொண்டாடப்பட்டது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 52”

  1. நல்ல காரியம். தொடர்ந்து வரவேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.

    Reply

Leave a Comment