திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 1 – 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை << தனியன்கள் முதல் பாசுரம். (உயர்வே பரன் படி…) இதில், மாமுனிகள் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள், அதாவது எம்பெருமானின் மேன்மையை விளக்கி, “அவன் திருவடிகளில் பணிந்தால் உஜ்ஜீவனத்தை அடையலாம்” என்று சொல்லும் முதல் திருவாய்மொழி சேதனர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கவல்லது என்று அருளிச்செய்கிறார். உயர்வே பரன் படியை  உள்ளதெல்லாம் தான் கண்டு உயர் வேதம் நேர் கொண்டுரைத்து மயர்வேதும் … Read more

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: Audio e-book – https://1drv.ms/b/s!AhgMF0lZb6nngwlxL2boI27NIf8T?e=TZV580 ஸ்ரீமந் நாராயணனால் தன் விஷயமான மயர்வற மதிநலம் (பரிபக்குவமான பக்தி) அருளப்பெற்றவர் நம்மாழ்வார். நம்மாழ்வாரின் திருவுள்ளத்தில் ஏற்பட்ட அனுபவத்தின் பெருக்கே திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி என்கிற நான்கு ஆச்சர்யமான ப்ரபந்தங்களாக அமைந்தன. இவற்றுள் திருவாய்மொழி ஸாமவேதத்தின் ஸாரமாகக் கருதப்படுகிறது. மோக்ஷத்தை விரும்புபவனான முமுக்ஷு அறிந்து கொள்ள வேண்டிய முக்யமான விஷயங்கள், அதாவது அர்த்த … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 10.10 – முனியே

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 10.9 பரமபதத்தை மானஸீகமாக அனுபவித்த ஆழ்வார், தன்னுடைய திருக்கண்களை விழித்துப் பார்த்துத் தான் இன்னும் ஸம்ஸாரத்தில் இருப்பதைப் பார்த்து, மிகவும் வருத்தப்பட்டார். இனியும் தன்னால் தரிக்க முடியாது என்றுணர்ந்து எம்பெருமானைக் கதறி அழைத்தும், பிராட்டியின் மீது ஆணையிட்டும் எம்பெருமானிடத்தில் தன்னைப் பரமபதத்தில் சேர்த்துக்கொள்ளும்படி ப்ரார்த்திக்க, எம்பெருமானும் இவர் பிரிவால் இவரை விடவும் வருந்தி, உடனே பரமபதத்தில் இருந்து பிராட்டியுடன் … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 10.9 – சூழ்விசும்பு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 10.8 பரமபதத்துக்கு விரைந்து செல்லவேண்டும் என்ற எண்ணம் ஆழ்வாருக்கு ஏற்பட, எம்பெருமானுக்கும் இவரைப் பரமபதத்துக்கு அழைத்து போகும் ஆசை மிகவும் அதிகமாக, அதற்கு முன் ஆழ்வாருக்குப் பரமபதத்தை அடைவதில் ஆசையை மேலும் அதிகமாக்க வேண்டும் என்று எண்ணி வேதாந்தத்தில் சொல்லப்பட்ட அர்ச்சிராதி கதியைக் காட்டிக்கொடுத்தான். ஆழ்வார் அதை அனுபவித்து அந்த அர்ச்சிராதி மார்க்கத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் போகும்படியையும் பரமபதத்தை … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 10.8 – திருமாலிருஞ்சோலை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 10.7 எம்பெருமான் ஆழ்வாரைப் பரமபதத்துக்கு அழைத்துப்போகத் தானே கருடவாஹனத்திலே வந்தருளினான். ஆழ்வாரும் எம்பெருமான் தனக்கு முதலில் இருந்து செய்த நன்மைகளை எண்ணிப்பார்த்து, நாம் இதற்காக ஒன்றுமே செய்யாமல், அவனே நம்மைக் கைக்கொள்ளுகிறான் என்றிருந்தார். அந்த ஸமயத்தில் ஆழ்வாருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இத்தனை காலம் நாம் ஒன்றும் செய்யாமல் இருக்க இன்று எப்படி எம்பெருமானின் கடாக்ஷம் நம் விஷயத்தில் … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 10.7 – செஞ்சொல்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 10.1 ஆழ்வார் பரமபதத்தை விரைந்து சென்று அடையவேண்டும் என்று ஆசைப்பட, எம்பெருமானும் அதற்கு இசைந்தான். ஆனால் அவனோ ஆழ்வாரைத் திருமேனியுடன் பரமபதத்துக்கு அழைத்துச் சென்று அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதைக் கண்ட ஆழ்வார் அவனுக்கு அவ்வாறு செய்யலாகாது என்று உபதேசிக்க, எம்பெருமானும் இறுதியில் ஆழ்வாரின் விருப்பத்துக்கு இசைந்தான். அதைக் கண்ட ஆழ்வார், எம்பெருமானின் சீல குணத்தைக் கண்டு … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 10.1 – தாளதாமரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 9.10 எம்பெருமானுக்கு நித்யகைங்கர்யத்தைப் பண்ண ஆசைப்பட்ட ஆழ்வார் அது இங்கே செய்ய முடியாது என்றுணர்ந்து, பரமபதத்துக்குச் சென்று கைங்கர்யம் செய்வதை ஆசைப்பட, அங்கே போவதற்கான விரோதிகளைக் கழித்து நம்மை அழைத்துப் போகக்கூடியவன் திருமோகூரிலே இருக்கும் காளமேகம் எம்பெருமானே என்று அவனே தனக்கு வழித்துணையாக இருப்பான் என்று அவன் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றுகிறார். முதல் பாசுரம். எதிரிகளை அழிக்கும் தன்மையையுடைய … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 8.10 – நெடுமாற்கு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 7.4 ஆத்மாவினுடைய உண்மையான ஸ்வரூபத்துக்கு ஏற்ற வ்ருத்தி (செயல்) அடியார்களுக்குத் தொண்டு செய்வதே என்ற விஷயத்தை ஆழ்வார் இந்தப் பதிகத்தில் தானும் அனுபவித்து மற்றவர்களுக்கும் உபதேசமாக அருளிச்செய்கிறார். பகவானுக்குத் தொண்டு செய்வது முதல் நிலை. அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்வது என்பது இறுதி நிலை என்ற விஷயத்தை ஆழ்வார் இப்பதிகத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார். முதல் பாசுரம். அடியார்களிடத்தில் அன்புகொண்டவனான … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 7.4 – ஆழியெழ

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 7.2 எம்பெருமானைப் பிரிந்து துக்கப்பட்ட ஆழ்வார் இரண்டு பதிகங்களில் பெண் பாவனையில் மிகவும் வருத்தத்துடன் பாசுரங்களை அருளிச்செய்தார். ஆழ்வாரை தேற்றவேண்டும் என்று பார்த்த எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை எல்லாம் ஆழ்வாருக்கு நன்றாகக் காட்டிக்கொடுக்க அவற்றை மிகவும் ஈடுபட்டு அனுபவித்த ஆழ்வார் அதை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தாலே ஆழியெழ என்று தொடங்கி இப்பதிகத்தில் அருளிச்செய்கிறார். … Read more

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 7.2 – கங்குலும்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: கோயில் திருவாய்மொழி << 6.10 பராங்குச நாயகியும் ஸ்ரீரங்கநாதனும் எம்பெருமானைத் துறந்து துயரத்தின் உச்சியை அடைந்த நம்மாழ்வார் தன்னிலை மாறிப் பெண்ணிலையை அடைந்தார். பராங்குச நாயகியாக ஸ்ரீரங்கநாதனிடத்தில் மிகவும் ஈடுபட்டு பேச முடியாத நிலையை அடைந்து, பராங்குச நாயகியின் திருத்தாயாராகத் தன் மகளைக் கொண்டு போய் பெரிய பெருமாள் திருமுன்பே இருக்கும் திருமணத்தூண்களுக்கு நடுவே கிடத்தித் தன் மகளின் அவல நிலையை அவனிடத்தில் … Read more