திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

Audio

e-book – https://1drv.ms/b/s!AhgMF0lZb6nngwlxL2boI27NIf8T?e=TZV580

ஸ்ரீமந் நாராயணனால் தன் விஷயமான மயர்வற மதிநலம் (பரிபக்குவமான பக்தி) அருளப்பெற்றவர் நம்மாழ்வார். நம்மாழ்வாரின் திருவுள்ளத்தில் ஏற்பட்ட அனுபவத்தின் பெருக்கே திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி என்கிற நான்கு ஆச்சர்யமான ப்ரபந்தங்களாக அமைந்தன. இவற்றுள் திருவாய்மொழி ஸாமவேதத்தின் ஸாரமாகக் கருதப்படுகிறது. மோக்ஷத்தை விரும்புபவனான முமுக்ஷு அறிந்து கொள்ள வேண்டிய முக்யமான விஷயங்கள், அதாவது அர்த்த பஞ்சகம் திருவாய்மொழியில் நன்கு விளக்கப்பட்டுளன. திருவாய்மொழிக்கு நம்பிள்ளை அருளிய ஈடு வ்யாக்யானம் திருவாய்மொழியின் அர்த்தங்களை நன்கு விளக்குகிறது.

திருவாய்மொழி நூற்றந்தாதி மணவாள மாமுனிகளால் அருளப்பட்ட அற்புதமான ப்ரபந்தம். இது பல கட்டுப்பாடுகளைக் கொண்டு அருளப்பட்டது. அதாவது:

  • எளிதில் கற்பதற்கும் சேவிப்பதற்கும் வகையாக அந்தாதி க்ரமத்தில் இருக்க வேண்டும்
  • திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்தின் அர்த்தம் ஈடு வ்யாக்யானத்தில் விளக்கப்பட்ட வகையில் இதில் ஒவ்வொரு பாசுரத்திலும் இருக்க வேண்டும்
  • ஒவ்வொரு பாசுரத்திலும் நம்மாழ்வாரின் திருநாமமும் பெருமைகளும் இருக்கவேண்டும்

இந்த ப்ரபந்தம் மிகவும் இனிமையானது. இதனுடைய சுருக்கமான அர்த்தங்களை இதற்குப் பிள்ளை லோகம் ஜீயர் அருளிய வ்யாக்யானத்தின் உதவியுடன் அனுபவிக்கலாம்.

ஆதாரம் – http://divyaprabandham.koyil.org/index.php/2020/09/thiruvaimozhi-nurrandhadhi-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment