நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – ஏழாம் திருமொழி – கருப்பூரம் நாறுமோ

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << ஆறாம் திருமொழி – வாரணமாயிரம் ஸீதாப் பிராட்டியைப் போலே வழியிலே வந்த ஒரு குரங்கான திருவடியிடம் (ஹனுமானிடம்) எம்பெருமானுடைய அனுபவத்தை விசாரிக்க வேண்டாதே எம்பெருமானின் அந்தரங்க கைங்கர்யபரரான, பகவதனுபவத்தில் தேசிகரானவரிடம் (தேர்ந்தவரிடம்) கேட்கும் பாக்யத்தைப் பெற்றாள் ஆண்டாள். ஸ்வப்னத்தின் முடிவில் எம்பெருமானுடன் ஒரு கூடலும் ஏற்பட்டிருக்கவேண்டும். அதனாலேயே எம்பெருமானின் அதராம்ருதம் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்து சங்கத்தாழ்வானிடம் … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – ஆறாம் திருமொழி – வாரணமாயிரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << ஐந்தாம் திருமொழி – மன்னு பெரும்புகழ் குயிலிடத்திலே தன்னை எம்பெருமானுடன் சேர்த்துவைக்குமாறு ப்ரார்த்தித்தாள். அது நடக்காததால் மிகவும் வருத்தமுற்றாள். எம்பெருமானோ இவளுக்கு இன்னமும் தன் மீதான ப்ரேமத்தை அதிகரிக்கவைத்து பின்பு வரலாம் என்று காத்திருந்தான். நம்மாழ்வாருக்கும் முதலிலே மயர்வற மதிநலம் அருளினாலும், பரபக்தி தொடக்கமாக பரமபக்தி நிலை ஈறாக வரவழைத்தே பரமபதத்தில் நித்ய கைங்கர்யத்தைக் கொடுத்தான். ஸீதாப் பிராட்டியும் … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – ஐந்தாம் திருமொழி – மன்னு பெரும்புகழ்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << நான்காம் திருமொழி – தெள்ளியார் பலர் கூடலிழைத்து அதில் ஆசை நிறைவேறாததால், முன் தானும் எம்பெருமானும் கூடியிருந்த காலத்திலே உடன் இருந்த குயிலைப் பார்த்து, நம் வார்த்தைக்கு மறு வார்த்தை சொல்லக்கூடியது, ஞானம் உள்ள பறவை என்றெண்ணி, இது நம்மை எம்பெருமானுடன் சேர்த்துவிடும் என்று நினைத்து, அந்தக் குயிலின் காலில் விழுந்து “என்னையும் எம்பெருமானையும் சேர்த்துவிடு” என்று ப்ரார்த்திக்கிறாள். … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – நான்காம் திருமொழி – தெள்ளியார் பலர்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << மூன்றாம் திருமொழி – கோழியழைப்பதன் எம்பெருமான் இடைப் பெண்களின் வஸ்த்ரங்களை எடுத்துக் கொண்டு குருந்த மரத்தில் இருக்க, அப்பெண்கள் அவனிடத்திலே ப்ரார்த்தித்தும் நிந்தித்தும் வஸ்த்ரங்களைப் பெற்றார்கள். எம்பெருமானும் அப்பெண்களும் கூடி அனுபவித்தார்கள். ஆனால் இந்த ஸம்ஸாரத்தில் எந்த இன்பமும் நிரந்தரமாக நிற்காது என்பதால், அவனும் அவர்களிடம் இருந்து பிரிந்து அவர்கள் இன்பத்தைத் தடுத்தான். அவர்களும் இவன் நம் வஸ்த்ரங்களைப் … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – மூன்றாம் திருமொழி – கோழியழைப்பதன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << இரண்டாம் திருமொழி – நாமமாயிரம் முன் பதிகத்தில் கண்ணனும் ஆண்டாள் முதலான இடைப்பெண்களும் கூடி இருக்க, இதைக் கண்ட இடைப்பெண்களின் பெற்றோர் “இப்படியே இவர்களை விட்டோம் என்றால் இவர்களின் கூடலினால் ஆனந்தம் தலைக்கேறி இவர்கள் அழிந்தே விடுவார்கள்” என்றெண்ணி, தங்கள் பெண்களைக் கண்ணனிடமிருந்து பிரித்து நிலவறைகளிலே அடைத்து விட்டனர். அந்நிலையிலே அப்பெண்கள் ஒரு பக்கமும் கண்ணன் மற்றொரு பக்கமும் … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – இரண்டாம் திருமொழி – நாமமாயிரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << முதல் திருமொழி – தையொரு திங்கள் எம்பெருமான் இப்படி இவர்கள் வேறு தேவதையான மன்மதனின் காலில் விழுந்து ப்ரார்த்திக்கும்படி இவர்களை நாம் கைவிட்டோமே என்று மனம் நொந்தான். திருவாய்ப்பாடியில் தான் இருந்த காலத்தில் அங்கிருந்த இடையர்கள் இந்த்ரனுக்குப் படையல் வைக்க, பரதெய்வமான நாம் இங்கே இருக்கும்போது தாழ்ந்த தேவதையான இந்த்ரனை இவர்கள் வணங்குகிறார்களே என்று வருந்தி அவர்களை கோவர்தன … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – முதல் திருமொழி – தையொரு திங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << தனியன்கள் ஆண்டாள் திருப்பாவையில் எம்பெருமானை உபாயமாகக் கொண்டாள், அவனுக்குச் செய்யும் தன்னலமற்ற தொண்டே உபேயம் என்று அறிவித்தாள். இந்த நினைவு இருந்தால் எம்பெருமான் தானே பலனைக் கொடுப்பான். ஆனால் ஆண்டாள் நாச்சியாருக்கோ, எம்பெருமான் வந்து அவளைக் கைக்கொண்டு அவள் ஆசையை நிறைவேற்றவில்லை. எம்பெருமான் மீதிருந்த அளவிறந்த காதலாலும் அவன் தன்னை உடனே வந்து கைக்கொள்ளாததாலும் மிகவும் கலக்கத்தை அடைந்தாள். … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி அல்லிநாள் தாமரை மேல் ஆரணங்கின் இன்துணைவி மல்லி நாடாண்ட மடமயில் – மெல்லியலாள் ஆயர்குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை வேயர் பயந்த விளக்கு புதிதாக மலர்ந்த, இதழ்களையுடைய தாமரை மலரில் நித்ய வாஸம் செய்யும் பெரிய பிராட்டியார் என்னும் தேவதையின் ப்ரிய தோழியாகவும், திருமல்லி நாட்டை ஆள்கின்ற அழகிய மயில் போன்றவளாகவும், ம்ருது ஸ்வபாவத்தை உடையவளுமான ஆண்டாள் நாச்சியார், … Read more

நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: முதலாயிரம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆண்டாள் நாச்சியார் பெருமையை உபதேச ரத்தின மாலை 24ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து  ஆழ்வார்களின் குடிக்கு ஒரே வாரிசாக வந்து அவதரித்தாள் ஆண்டாள். அஞ்சு என்பது ஐந்து என்று ஒரு … Read more