உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 65
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 64 ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன் தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை – ஆசையுடன் நோக்குமவன் என்னும் நுண்ணறிவைக் கேட்டு வைத்தும் ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம் அறுபத்தைந்தாம் பாசுரம். ஆசார்யனும் சிஷ்யனும் செய்ய வேண்டிய விஷயங்களைக் காட்டி, இதை இயல்வாக அனுஷ்டானத்தில் பார்ப்பது அரிது என்று அருளிச்செய்கிறார். ஆசார்யன் சிஷ்யனுடைய உயர்ந்ததான ஆத்மாவையே … Read more