உத்தர​ திநசர்யை – 9

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<< உத்தர திநசர்யை – 8

கர்மாதீநே வபுக்ஷி குமதி: கல்பயந்நாத்மபாவம்
து: கேமக்ந:கிமிதி ஸுசிரம் தூயதே ஜந்துரேஷ: |
ஸர்வம் த்யக்த்வா வரவரமுநே ஸம்ப்ரதி த்வத்ப்ரஸாதாத்
திவ்யம் ப்ராப்தும் தவ பதயுகம் தேஹி மே ஸுப்ரபாதம்||

பதவுரை: ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே!, ஏஷ: ஜந்து: – நம்மடியவனாகிய இந்த ஜீவாத்மா, கர்ம அதீநே – முன்செய்த முழுவினையால் உண்டான, வபுக்ஷி – தனது தேஹத்தில், ஆத்மபாவம் – ஆத்மாவின் தன்மையை, கல்பயந் – ஏறிட்டு, குமதி: – திரிபுணர்ச்சியுடையவனாய்க் கொண்டும், து: கே மக்ந: – ஸம்சாரது: க (ஸாகர) த்தில் மூழ்கியவனாய்க்கொண்டும், கிம் – எதற்காக தூயதே – வருந்திகிறான், இதி (மத்வா) – என்று தேவரீர் நினைத்தருளி, (அடியேன்) ஸர்வம் – முற்கூறிய திரிபுணர்ச்சி ஸம்ஸாரதுக்கம் முதலிய எல்லாவற்றையும், த்யக்த்வா – விட்டொழிந்து, ஸம்ப்ரதி – இப்பொழுதே, தவதிவ்யம் பதயுகம் ப்ராப்தும் – தேவரீருடைய மிகவும் அழகிய திருவடியிணையை அடைவதற்கு உறுப்பாக, த்வத் ப்ரஸாதாத் – தேவரீருடைய (இயற்கையான) அனுக்ரஹத்தினாலே, மே – அடியேனுக்கு, ஸுப்ரபாதம் – (தேவரீர் திருவடிகளை அநுபவிப்பதென்னும் பகல்வேளைக்கு ஆரம்பமாகிற) நல்ல விடிவை, தேஹி – தந்தருளவேணும்.

கருத்துரை: ‘கர்மாதீநே’ என்று, தொடங்கி, ‘தூயதே ஜந்துரேஷ:’ என்பதிறுதியாக முன்னிரண்டடிகளும், மாமுநிகள் தமது சிஷ்யனைப் பற்றி நினைக்கவேண்டிய நினைப்பின் அநுவாதமாகும் ‘இதி’ என்பதற்கு பிறகு ‘மத்வா’ என்றொரு பதத்தைக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது. தேவரீர் திருவடிகளை அனுபவிக்கமுடியாமல் கழிந்த காலம் ப்ரளயராத்ரி இனிமேல் அவ்வனுபவத்தைப் பெறப்போகும் காலம் பகல் போன்றது. அதற்கு முற்பட்டதகிய நல்ல விடியற்காலத்தை, தேவரீருக்குண்டான் இயற்கையான க்ருபையாலே கற்பித்தருள வேணுமென்றாயிற்று இதனால்.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment