ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

mamunigal-srirangamமாமுனிகள் – ஸ்ரீரங்கம்

eRumbiappA-kAnchiஎறும்பியப்பா – காஞ்சிபுரம்

e-book : https://1drv.ms/b/s!AiNzc-LF3uwygiQUxo63e16l5acS

முன்னுரை

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை என்னும் நல்லநூலை இயற்றிய ஸ்ரீ தேவராஜகுரு என்று ப்ரஸித்திபெற்ற எறும்பியப்பா மிகப்பெரிய வித்வானும் கவியுமாவார். இவர் மணவாள மாமுனிகளின் ப்ரதாந சிஷ்யர்கள்  எண்மரில் ஒருவர். ஆசார்யராகிய மணவாளமாமுனிகளையே தெய்வமாகக் கருதிய இப்பெரியவர் அவர் விஷயமாக வரவரமுநி காவ்யம், வரவரமுநிசம்பூ, வரவரமுநிசதகம் முதலிய பலநூல்களை இயற்றியுள்ளார். இவருடைய மற்றுள்ள பெருமைகளைப் பிள்ளைலோகார்ய ஜீயர் அருளிய யதீந்த்ரப்ரவணப்ரபாவம் என்னும் நூலில் பரக்கக் காணலாம். கி.பி.1370 முதல் கி.பி.1443 வரையில் வாழ்ந்தருளிய மணவாள மாமுனிகளின் காலமே இவருடைய வாழ்ச்சிக்காலமாகும். இவர் மணவாள மாமுனிகளின் நித்யாநுஷ்டானங்களைப்பற்றி ஸ்ரீ வரவரமுநி திநசர்யை என்ற நூலினையும் இயற்றியுள்ளர். இந்நூல் முன்று பிரிவுகளைகொண்டது. பூர்வதிநசர்யை, யதிராஜவிம்ஶதி, உத்தரதிநசர்யை என்பன அப்பிரிவுகள். ஒருநாளின் முற்பகுதியின் அநுஷ்டாநத்தையும், பிற்பகுதியின் அநுஷ்டாநத்தையும் முறையே தெரிவிப்பன பூர்வதிநசர்யையும், உத்தரதிநசர்யயும் ஆகும். எம்பெருமானாரைப்பற்றி த்யாநித்துத் துதிப்பதும் மணவாளமாமுனிகளின் அநுஷ்டாநத்தில் சேர்ந்ததாகையால் பெரியோர்கள் மணவாளமாமுனிகள் எம்பெருமானார் விஷயமாக அருளிச்செய்த யதிராஜவிம்ஶதியையும் பூர்வோத்தர திநசர்யைகளின் இடையில் சேர்த்தருளினர்.

இம்முன்று பகுதிகளைக்கொண்ட ஸ்ரீ வரவரமுநிதிநசர்யை என்னும் நூலுக்கு ஏறக்குறைய 260 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தருளிய ‘வாதூலவீரராகவஸூரி’ என்ற திருமழிசை அண்ணாவப்பங்கார்ஸ்வாமி பணித்தருளிய ஸம்ஸ்க்ருதவ்யாக்யானத்தைத் தழுவித் தமிழில் ஓருரை எழுதப்படுகிறது.

TAKSwamiஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமி

  • தனியன்

எறும்பியப்பாவின் தனியன்

ஸௌம்யஜாமத்ருயோகீந்த்ரசரணாம்புஜஷட்பதம் |
தேவராஜகுரும் வந்தே திவ்யஜ்ஞாநப்ரதம் ஶுபம் ||

ஸௌம்யஜாமத்ருயோகீந்த்ர – அழகியமணவாளமாமுனிகளின், சரணாம்புஜஷட்பதம் – திருவடித்தாமரைகளில் வண்டுபோல் படிந்து ரஸாநுபவம் செய்பவரும், திவ்யஜ்ஞாநப்ரதம் – (தம்மையண்டினவர்க்கு) உயர்ந்த ப்ரஹ்மஜ்ஞாநத்தை அளிப்பவரும், ஶுபம் – அறிவினாலும், அநுஷ்டாநத்தாலும் ஶோபிப்பவருமான,  தேவராஜகுரும் – தேவராஜகுரு என்ற எறும்பியப்பாவை, வந்தே – வணங்கித் துதிக்கிறேன்.

மொழி பெயர்ப்பு – ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமி

பிற மொழிகளில்

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://guruparamparai.wordpress.com
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

0 thoughts on “ஸ்ரீ வரவரமுநி திநசர்யை”

Leave a Comment