பூர்வ திநசர்யை – 14 – பரேத்யு:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>

 14-ஆம் பாசுரம்

परेध्युः पश्चिमे यामे यामिन्यास्समुपस्थिते
प्रबुध्य शरणं गत्वा परां गुरुपरम्पराम्

பரேத்யு: பஸ்சிமே யாமே யாமிந்யாஸ்ஸமுபஸ்திதே |
ப்ரபுத்ய ஸரணம் கத்வா பராம் குருபரம்பராம் || (14)

பதவுரை:- பரேத்யு – தமக்கு எதிர்பாராமல் மாமுனிகளோடு சேர்த்தி ஏற்பட்ட மறுநாளில், யாமிந்யா – இரவினுடைய, பஸ்சிமே யாமே – கடைசியான நாலாவது யாமமானது, ஸமுபஸ்திதே ஸதி – கிட்டினவளவில், (மாமுனிகள்) ப்ரபுத்ய – தூக்கம் விழித்து, பராம் – உயர்ந்த, குருபரம்பராம் – எம்பெருமான் தொடக்கமாக தம்முடைய ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை முடிவாகவுள்ள ஆசார்யர்களின் தொடர்ச்சியை, ஸரணம் கத்வா – த்யானித்துச் ஸரணம் புகுந்து…

எம்பெருமானாகிய ஸித்தோபாயத்தை (ஆசார்ய பர்யந்தமாக) மோக்ஷோபாயமென்று பற்றும் அதிகாரிக்கு ஸர்வதர்மங்களையும் விட்டுவிடுதலை அங்கமாகக் கண்ணபிரான் கீதை சரமஸ்லோகத்தில் விதித்திருந்தபோதிலும், நித்யகர்மாநுஷ்டானத்தை பகவத் கைங்கர்யரூபமாகவோ, உலகத்தாரை அநுஷ்டிக்கச் செய்வதாகிற லோகஸங்க்ரஹத்திற்காகவோ பெரியோர்கள் செய்தே தீரவேண்டுமென்னும் ஸித்தாந்தத்தை அநுஸரித்து, பரமகாருணிகரான மாமுனிகள் முற்கூறியபடி அபிகமனம், இஜ்யை முதலான – ஐந்து காலங்களில் செய்யத்தக்க ஐந்து கருமங்களையும் பகவத்கைங்கர்யாதிரூபமாக நாள்தோறும் அநுஷ்டித்து வருவதனாலும், ‘குருவின் நித்யகர்மாநுஷ்டானங்களையும் ஸிஷ்யன் அநுஸந்திக்கவேண்டும்’ என்னும் ஸாஸ்த்ரத்தை உட்கொண்டும், ஆசார்ய பக்தியை முன்னிட்டும் இவ்வெறும்பியப்பா மாமுனிகளைப் பற்றிய திநசர்யா ப்ரபந்தத்தை அருளிச் செய்கிறார். ததீயாரதன காலத்தில் ஸ்ரீவைஷ்ணவ பங்க்தியைப் பாவநமாக்குவது – பங்க்திபாவநராகிய மாமுனிகளைப் பற்றிய இந்நூலென்பது முன்பே கூறப்பட்டது நினைக்கத்தக்கது.

மேல் ஸ்லோகத்தில் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் சொல்லப்படுவதனால் இக்குருப்பரம்பராநுஸந்தானம் அதற்கு அங்கமாக நினைக்கத்தக்கது; குருபரம்பரையை த்யானம் செய்யாமல் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் கூடாதாகையால் என்க. இங்கு குருபரம்பரை என்பது – பரமபதத்தில் ஆசார்யப்ரீதிக்காகப் பண்ணும் பகவதனுபவமாகிய மோக்ஷமொன்றையே புருஷார்த்தமாகவும், ஆசார்ய பர்யந்தமாக எம்பெருமான் ஒருவனையே அதற்கு உபாயமாகவும் உபதேசிக்கிற நம்முடைய ஆசார்யர்களின் பரம்பரையேயாகும். (14)

archived in https://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – https://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org/
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment