உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 65

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 64

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன் 

தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை ஆசையுடன்

நோக்குமவன் என்னும் நுண்ணறிவைக் கேட்டு வைத்தும்

ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம் 

அறுபத்தைந்தாம் பாசுரம். ஆசார்யனும் சிஷ்யனும் செய்ய வேண்டிய விஷயங்களைக் காட்டி, இதை இயல்வாக அனுஷ்டானத்தில் பார்ப்பது அரிது என்று அருளிச்செய்கிறார்.

ஆசார்யன் சிஷ்யனுடைய உயர்ந்ததான ஆத்மாவையே தன்னுடைய உபதேசம், அனுஷ்டானம் ஆகியவைகளால் ரக்ஷித்து வருவான். ஆசார்யனாலே ஞான தேஜஸ்ஸைப் பெற்ற சிஷ்யனோ தன்னுடைய ஆசார்யனின் “எம்பெருமானாலே விரும்பப்படும்” என்கிற பெருமை பொருந்திய திருமேனியைத் தன்னுடைய கைங்கர்யங்களால் பரிவுடன் ரக்ஷித்து வருவான். இந்த ஆழ்ந்த அர்த்தத்தைப் பெரியோர்களிடம் உபதேச பரம்பரையாகக் கேட்டிருந்தாலும், இவை கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இதன்படி நடப்பது மிகவும் அரிது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment