அஷ்ட ச்லோகீ – ச்லோகங்கள் 5 – 6 – த்வயம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

அஷ்ட ச்லோகீ

<< முந்தைய பதிவு

vishnu-lakshmi

ச்லோகம் 5

நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம்
கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் |
ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம்
தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: ||

பொருள்

இந்த ச்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு கண்டங்களும் ஆறு பதங்களும் கொண்டு அமைந்தது. பத்துப் பொருளை உட்கொண்டிருக்கிறது: (1) சேதனனைத் தன் வயமாக நடத்தும் திறமை (2) பிராட்டியோடு பிரிக்க முடியாத நிலை (3) ஈச்வரத் தன்மைக்கேற்ற இனிய குண ஸமூஹம் (4) அழகிய திருமேனி (5) உபாயம் (6) சேதனன் செய்ய வேண்டிய கடமை (7) இருவருமான சேர்த்தியில் கைங்கர்யம் என்னும் பலன் (8) உரிமை என்னும் ஸம்பந்தம் (9) கைங்கர்ய ப்ரார்த்தனை (10) கைங்கர்யத்துக்கு இடையூறாக உள்ளவைகளிலிருந்து விடுதலை – ஆகிய இந்தப் பத்துப் பொருள்களையும் இடைவிடாது நினைப்பவனை ரக்ஷிக்கிறது என்னும் இதை வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

 

ச்லோகம் 6

ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்யாநபாயாம் ச்ரியம்
ஸம்ஸ்ரீத்யாச்ரயணோசிதாகில குணஸ்யாங்க்ரீர் ஹரேராச்ரயே |
இஷ்டோபாயதயா ச்ரியாச ஸஹிதாயாத்மேஸ்வராயார்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷமப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம: ||

பொருள்

பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானிடத்தில் கைங்கர்ய ப்ரார்த்தனையைத் தெரிவிக்கிறது. உலகத்தை நியமிப்பவனாம் எம்பெருமானுடைய அன்பைப் பெற்றவளும் என்றைக்கும் அழிவில்லாதவளுமான பிராட்டியை முன்பு ஆச்ரயித்து ஆச்ரயணத்துக்குத் தேவையான எல்லாக் குணங்களையும் பெற்றிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளை நான் பற்றுகிறேன். எனக்கு இஷ்டமான மோக்ஷத்துக்கு உபாயமாகப் பற்றுகிறேன். பிராட்டியுடன் கூடியவனும் சேதனங்களுக்கு நியாமகனுமான எம்பெருமானை உத்தேசித்தே நித்தியமான எல்லா விதமான கைங்கர்யத்தைச் செய்யவும் அடியேனுக்குக் கைங்கர்ய பலத்தில் ஸம்பந்தம் இராமலும் தடையின்றிச் செய்ய வேண்டும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “அஷ்ட ச்லோகீ – ச்லோகங்கள் 5 – 6 – த்வயம்”

Leave a Comment