உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 72

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 71

பூருவாசாரியர்கள் போதம் அனுட்டானங்கள்

கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் தேறி இருள்

தருமா ஞாலத்தே இன்பம் உற்று வாழும் தெருள்

தருமா தேசிகனைச் சேர்ந்து 

எழுபத்திரண்டாம் பாசுரம். ஒரு நல்ல ஆசார்யனை அடிபணிந்து ஆத்மாவின் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த கைங்கர்ய ப்ராப்தியை இவ்வுலகிலேயே பெறுங்கோள் என்று மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறார்.

ஸத் ஸம்ப்ரதாயத்திலே ஸ்திரமான நிஷ்டை கொண்ட ஒரு ஆசார்யனிடம் சரண் அடைந்து, ஸ்ரீமந்நாதமுனிகள் தொடக்கமான நம் பூர்வாசார்யர்களின் ஞானம் மற்றும் அனுஷ்டானங்களை நன்றாக உபதேசிப்பவர்களிடம் அவற்றைக் கற்றறிந்து, அதிலே நல்ல நிஷ்டை பிறந்து, அஜ்ஞானத்தைக் கொடுத்து அதையே வளர்க்கும் ஸம்ஸார மண்டலத்திலேயே பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் செய்து இன்பத்துடன் வாழுங்கோள்.

இந்த ஸம்ஸாரம் நமக்கு அஜ்ஞானத்தை அளித்து அதை நன்றாக வளர்க்கும் இடம். நல்ல ஆசார்யனைப் பெற்று அந்த ஆசார்யனிடத்தில் உபதேசங்களைப் பெற்று, ஆசார்யனுக்கு அனுகூலமாக இருந்து, இங்கே இருக்கும் காலத்திலும் திருமால் அடியார்களைப் பூசித்து வாழ்ச்சி பெறலாம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment