வரவரமுனி சதகம்  பகுதி 7

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

வரவரமுனி சதகம்

<< பகுதி 6

Image result for manavala mamunigal melkote

मन्त्रो दैवं फलमिति मया वाञ्छितं यद्यपि स्यात्
मध्ये वासो मलिनमनसामेवमेवं यदि स्यात् |
यद्वा किन्चित्त्वदनुभजनं सर्वदा दुर्लभं स्यात्
देहं त्यक्तुं वरवरमुने ! दीयतां निश्चयो मे || ६१||

மந்த்ரோ தைவம் பலமிதி  மயா வாஞ்சிதம் யஸ்யபிஸ்யாத்
மத்யே வாஸோ மலிந மநஸாமேவமேவம் யதிஸ்யாத் |
யத்வா கிஞ்சித் த்வதநு பஜநம் ஸர்வதா துர்லபம் ஸ்யாத்
தேஹம் த்யக்தும் வரவரமுநே தீயதாம் நிச்சயோ மே. || 61

மந்த்ரம் தேவதை பலம் இவை என்னால் விரும்பத்தக்கவையாக இருந்தால், கெட்ட எண்ணமுள்ள மனிதர் மத்தியில் எனக்கு வாஸம் இருக்குமானால், அல்லது உமது ஸேவை எனக்கு எல்லா விதத்திலும் துர்லபமாக இருக்குமானால் இந்த உடலை விட்டுப்போக எனக்கு நிச்சயத்தை உண்டாக்குவீராக!

आचार्यत्वं तदधिकमिति ख्यातमाम्नायमुख्यैः
एष श्रीमान् भवति भगवान् ईश्वरत्वं विहाय ||
मन्त्रं दाता वरवरमुने ! मन्त्ररत्नं त्वदीयं
देवः श्रीमान्  वरवरमुनेर्वर्तते देशिकत्वे || ६२||

ஆசார்யத்வம் தததிகமிதி க்யாதம் ஆம்நாய முக்க்யை:
ஏஷ ஸ்ரீமாந் பவதி பகவாந்! ஈஸ்வரத்வம் விஹாய ||
மந்த்ரம் தாதா வரவரமுநே மந்த்ர ரத்நம் த்வதீயம்
தேவஸ்ரீமாந் வரவரமுநிர் வர்த்ததே தேசிகத்வே || 62

வேத வாக்யங்களால் ஆசார்யனாக இருப்பது ஈஶ்வரத் தன்மைக்கு மேற்பட்டது எனக் கூறப்பட்டது என்று இந்த பகவான் ஈஶ்வரத்தன்மையை விட்டு ஹே வரவரமுநியே! உம்மிடத்தில் மந்த்ரத்தைக் கொடுப்பவராயும் உமது த்வயத்தையும் தேவனான ஶ்ரிய:பதியாகவும் ஆசார்யனாக இருப்பதிலும் இருக்கிறார்.

आत्मानात्मप्रमितिविरहात्पत्युरत्यन्तदूरो |
घोरे तापत्रितयकुहरे घूर्णमानो जनोऽयम् ||
पादच्छायां वरवरमुने ! प्रापितो यत्प्रसादात्
तस्मै देयं तदिह किमिव श्रीनिधे विद्यते ते || ६३||

ஆத்மாநாமாத்ம ப்ரமிதி விரஹாத் பத்யுரத்யந்த தூரே
கோரே தாபத்ரிதய குஹரே கூர்ணமாநோ ஜநோயம் ||
பாதச்சாயாம் வரவரமுநே ப்ராபிதோ யத் ப்ரஸாதாத்
தஸ்மை தேயம் ததிஹ கிமிவ ஸ்ரீநிதே வித்யதே தே || 63

ஜீவன் ப்ரக்ருதி என்னும் அறிவில்லாமல் எம்பெருமானுக்கு வெகு தூரத்தில் கடுமையான ஆத்யாத்மிகம், ஆதி தைவிகம், ஆதி பௌதிகம் என்று சொல்லக்கூடிய மூன்று வகையான தாபம் என்னும் பள்ளத்தில் சுழன்று கொண்டிருக்கிற இந்த ஜநம் வரவரமுநியே! எவர் அநுக்ரஹத்தால் எம்பெருமான் திருவடி நிழலை அடைவிக்கப்பட்டதோ அவருக்குக் கொடுக்கவேண்டியது (உமக்கு) இங்கு என்ன இருக்கிறது  எம்பெருமானே!

विख्यातं यद्रघुकुलपते विश्वतः क्ष्मातलेऽस्मिन्
नित्योदग्रं वरवरमुने ! निस्सपत्नं महत्वम् ||
पश्यन्नन्धः प्रकृतिविवशो बालिशो यादृशोऽयं |
तत्वं तस्य प्रकटयसि मे तादृशैरेव योगैः || ६४||

விக்யாதம் யத் ரகுகுல பதேர் விச்வத: க்ஷ்மாதசேஸ்மிந்
நித்யோதக்ரம் வரவரமுநே நிஸ்ஸபத்நம் மஹத்த்வம் ||
பஶ்யந் நந்த ப்ரக்ருதி விவசோ பாலிஸோ யாத்ருசோயம்
தத்வம் தஸ்ய ப்ரகடயஸி மே தாத்ருசைரேவ யோகை: || 64

இந்நிலவுலகில் நாற்புறங்களிலும் சக்கரவர்த்தி திருமகனுடைய எந்தப் பெருமை தினந்தோறும் வளர்ந்து ப்ரஸித்தமாக , எதிரில்லாமல் இருக்கிறதோ அதைப் பார்த்துக்கொண்டும் குருடனான இந்த பாலன் இந்த ப்ரக்ருதி வசமாக இருப்பவனுக்கு அவருடைய உண்மைகளை அப்படிப்பட்ட யோகங்களாலேயே (எனக்கு) வெளிப்படுத்துகிறீர்.

लक्ष्मीभर्तुः परमगुरुतां लक्षयन्ती गुरूणां |
पारम्पर्यक्रमविवरणी या हि वाणी पुराणी ||
अर्थं तस्याः प्रथयसि चिरादन्यतो यद्दुरापं |
दिव्यं तन्मे वरवरमुने ! वैभवं दर्शयित्वा || ६५||

லக்ஷ்மீ பர்த்ரு: பரம குருதாம் லக்ஷயந்தீ குரூணாம் |
பாரம்பர்ய க்ரம விவரணீ யாஹி வாணீ புராணீ ||
அர்த்தம் தஸ்யா: ப்ரதயதி சிராத் அந்யதோ யத்துராபம் |
திவ்யம் தன்மே வரவரமுநே வைபவம் தர்சயித்வா || 65

வரவரமுநியே! எந்தப் புராதன வாக்கான வேதம் குரு  பரம்பரையை விவரிப்பதாகப் பிராட்டியின் கணவனுக்குப் பரம குருவாக இருக்கும் தன்மையைக் குறிக்கிறதோ அதை வேறு ஒருவருக்கும் கிடைக்காத பொருளாக அந்தத் திவ்யமான வைபவத்தைக் காட்டிக்கொண்டு பொருளை விளக்குகிறீர்.

तत्वं यत्ते किमपि तपसा तप्यतामप्यृषीणां |
दूराद्दूरं वरवरमुनेदुष्कृतैकान्तिनो मे ||
व्याकुर्वाणः प्रतिपदमिदं व्यक्तमेवं दयावान्
नाथो नैतत्किमिति जगति ख्यापयत्यद्वितयिम् || ६६||

தத்வம் யத்தே கிமபி தபஸா தப்யதாமப்ய் ருஷீணாம்  |
தூராத் தூரம் வரவரமுநே! துஷ்க்ருதை காந்திநோ மே ||
வ்யாகுர்வாண ப்ரதி பதமிதம் வ்யக்தமேவம் தயாவாந்
நாதோ நைதத் கிமிதி ஜகதி க்யாபயத் யத்விதீயம். || 66

தவத்தினால் தபிக்கப்படுகிற முனிவர்களுக்கும் வெகு தூரத்திலுள்ள தத்வம் (ஆகிய தேவரீர்) பாபத்தையே நிரம்பப் பெற்றிருக்கும் எனக்கு அடிக்கடி தயையுடன் இவ்வாறு விவரித்துக்கொண்டு நாதனாக இருக்கிறீர். இது என்னவென்று இந்த உலகில் ஒருவராகவே வெளிப்படுத்துகிறீர்.

कालेकाले कमलजनुषां नास्ति कल्पायुतं किं |
कल्पेकल्पे हरिरवतरन् कल्पते किन्न मुक्त्यै ||
मृत्वामृत्वा तदपि दुरितैरुद्भवन्तो दुरन्तैः
अद्याऽपि त्वां वरवरमुने ! हन्त नैवाऽऽश्रयन्ते || ६७||

காலே காலே கமலஜநுஷாம் நாஸ்தி கல்பாயுதம் கிம் |
கல்பே கல்பே ஹரிரவதரன் கல்பதே கிம் ந முக்த்யை  ||
ம்ருத்வா ம்ருத்வா ததபி துரிதை ருத்பவந்தோ துரந்தை:
அத்யாபித்வாம் வரவரமுநே ஹந்த நைவாச்ரயந்தே || 67

ஹே வரவரமுநியே! அந்தந்தக் காலத்தில் ப்ரஹ்மாக்களுக்குப் பதினாயிரம் கல்பம் இல்லையா, கல்பந்தோறும் எம்பெருமான் அவதரித்து அவர்களுக்கு முக்தி அளிக்க வல்லவராகவில்லையா? முடிவில்லாத பாபங்களால் அவர்கள் இறந்து இறந்து பிறந்துகொண்டு இப்போதும் தேவரீரை ஆச்ரயிப்பதில்லை. மஹா கஷ்டம்! ஆச்சர்யம்!

कारागारे वरवरमुने ! वर्तमानश्शरीरे |
तापैरेष त्रिभिरपि चिरं दुस्तरैस्तप्यमानः ||
इच्छन्भोक्तुं तदपि विषयानेव लोकः क्षुधार्तो |
हित्वैव त्वां विलुठति बहिर्द्वारि पृथ्वीपतीनाम्  || ६८||

காரா காரே வரவரமுநே வர்த்தமானஸ் சரீரே |
தாபைரேஷத்ரிபிரபி சிரம் துஸ்தரைஸ் தப்யமாந: ||
இச்சந் போக்தும் ததபி விஷயானேவ லோக: க்ஷுதார்த்தோ |
ஹித்வைவ த்வாம் விலுடதி பஹிர்த்வாரி ப்ருத்வீ பதீநாம் || 68

ஹே வரவரமுநியே! உடல் என்னும் சிறையில் இருந்துகொண்டு தாண்டமுடியாத மூவகையான தாபங்களால் வெகு காலமாகத் தடுக்கப்பட்டவனாக இருந்தபோதிலும் இந்த ஜனம் விஷயங்களை அநுபவிப்பதிலே ஆசை கொண்டு பசியால் பீடிக்கப் பட்டவனாக உம்மைவிட்டு அரசர்களுடைய வெளி வாயிற்படிகளில் புரளுகிறான்.

मध्ये माम्सक्षतजगहनं  विड्भुजामेव भोज्यं |
दीनो वोढुं दृढमिति वपुश्चेष्टते रात्र्यहानि ||
भग्ने तस्मिन् परिणमति यः पातकी यातनाभ्यो |
देही नित्यो वरवरमुने ! केन जिज्ञासनीयः || ६९||

மத்யே மாம்ஸ க்ஷத ஜக ஹநம் விட் பூஜா மேவ போஜ்யம் |
தீநோ வோடும் த்ருடமிதி வபுஸ் சேஷ்டதேராத்ர்ய  ஹாநி ||
பக்னே தஸ்மிந் பரிணமதிய: பாதகீ யாதநாப்யோ |
தேஹீ நித்யோ வரவரமுநே!   கேன ஜிக்னாஸனீய: || 69

ஹே வரவரமுநியே! மத்தியில் மாம்ஸம் இரத்தம் இவைகளால் நிறைந்தும் அமேத்யத்தை ருசிப்பவர்களுக்கே அனுபவிக்கத்  தக்கதுமான இந்த உடலை சுமக்க திடமாக எண்ணி இந்த எளியவன் இரவும் பகலும் நடமாடுகிறான். அது முறிந்தவுடன் எந்தப்  பாபி நரக வேதனைகளில் ப்ரவ்ருத்திக்கிறானோ அவனுக்கு நிலையான உடலையுடைய ஜீவாத்மா எவனால் அறியத்தக்கது? ஒருவரும் அதை அறிய ஆவலுடையாரில்லை என்று பொருள்.                                                        

अल्पादल्पं क्षनिकमसकृद्दुष्कृतान्येव कृत्वा
दुःखोदग्रं सुखमभिलशन्दुर्लभैरिन्द्रियार्थैः ||
मोघं कृत्वा वरवरमुने ! मुक्तिमूलं शरीरं |
मज्जत्यन्धे तमसि मनुजस्त्वाप्रियस्त्वाप्रियाणाम् || ७०||

அல்பாதல்பம் க்ஷணிகமஸக்ருத் துஷ்க்ருதான்யேவ க்ருத்வா
து:கோதக்ரம் ஸுகமபிலக்ஷந் துர்லபை ரிந்திரியார்த்தை: ||
மோஹம் க்ருத்வா வரவரமுநே! முக்திமூலம் ஶரீரம் |
மஜ்ஜத்யந்தே தமஸி மநுஜஸ் தவப்ரியஸ் த்வத் ப்ரியாணாம். 70

ஹே வரவரமுநியே! மிகவும் சிறியவையும் க்ஷணத்தில் செய்யக்கூடியவையுமான  பாபங்களையே அடிக்கடி செய்துவிட்டு துக்கம் நிறைந்த ஸுகத்தை ஆசைப்பட்டு (அடைய முடியாத) இந்திரிய விஷயங்களால் முக்திக்குக் காரணமான சரீரத்தை வீணாக்கி உமதன்பர்களுக்கு வெறுப்பையூட்டிக்கொண்டு அந்த தமஸ் என்னும் நரகத்தில் மூழ்குகிறான்.

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment