உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 43

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 42

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட

பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் இன்பா

வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது

இருபத்து நாலாயிரம் 

நாற்பத்துமூன்றாம் பாசுரம். பெரியவாச்சான் பிள்ளை திருவாய்மொழிக்கு அருளிச்செய்த இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யானத்தின் வைபவத்தை அருளிச்செய்கிறார்.

லோகாசார்யர் என்று கொண்டாடப்படும் நம்பிள்ளை தம்முடைய பெரும் கருணையினாலே தம் சிஷ்யர்களில் முக்யமானவரான வ்யாக்யான சக்ரவர்த்தியான பெரியவாச்சான் பிள்ளையைத் திருவாய்மொழிக்கு ஒரு வ்யாக்யானமிடுமாறு ஆணையிட, அந்த ஆணையையே காரணமாகக் கொண்டு, இன்பமாக, பகவத் கருணையினாலே வந்த பக்தியைக் கொண்டிருந்த நம்மாழ்வாராம் மாறன் அருளிச்செய்த திருவாய்மொழிக்குப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த வ்யாக்யானம் இருபத்து நாலாயிரப்படி வ்யாக்யானம். இது ஸ்ரீ ராமாயணத்தின் அளவிலே இருக்கும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment