உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 42

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 41

தம் சீரை ஞானியர்கள் தாம் புகழும் வேதாந்தி

நஞ்சீயர் தாம் பட்டர் நல்லருளால் எஞ்சாத

ஆர்வமுடன் மாறன் மறைப் பொருளை ஆய்ந்துரைத்தது

ஏர் ஒன்பதினாயிரம்

நாற்பத்திரண்டாம் பாசுரம். நஞ்சீயர் திருவாய்மொழிக்கு அருளிச்செய்த ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானத்தின் வைபவத்தை அருளிச்செய்கிறார்.

வேதாந்தியான நஞ்சீயரின் பெருமைகளை சாஸ்த்ரம் தெரிந்த ஞானியர்கள் மிகவும் கொண்டாடுவர் ஏனெனில் வேதாந்த்தத்திலே கரை கண்டவர் இவர். இப்படிப்பட்ட நஞ்சீயர் தன்னுடைய ஆசார்யரான பராசர பட்டரின் திருவருளால் நம்மாழ்வாராம் மாறன் அருளிச்செய்த திருவாய்மொழிக்குக் குறைவில்லாத பக்தியுடன் அருளிய வ்யாக்யானம், நன்கு ஆராய்ச்சி செய்து அருளப்பட்டதான ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானம். பராசர பட்டரின் பெரும் கருணையாலே திருத்தப்பட்டு அவரிடமே ஸம்ப்ரதாய அர்த்தங்களைக் கற்றுணர்ந்த நஞ்சீயர் திருவாய்மொழியை நூறு முறை காலக்ஷேபமாக ஸாதித்தருளிய பெருமையைப் பெற்றவர். இது ஸ்ரீபாஷ்யத்தின் அளவிலே இருக்கும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment