ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவாரார்
அருளிச் செயலை அறிவாரார் – அருள் பெற்ற
நாதமுனி முதலாம் நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே உண்டோ பேசு
முப்பத்தாறாம் பாசுரம். ஆழ்வார்களுடைய் ஏற்றத்தையும் அருளிச்செயல்களுடைய ஏற்றத்தையும் உண்மையாக அறிபவர்கள் நம்முடைய ஆசார்யர்களைத் தவிர வேறொருவர் இல்லை என்று தன் நெஞ்சுக்கு அருளிச்செய்கிறார்.
அறிவிலியான நெஞ்சே! தெளிந்த ஞானத்தைப் பெற்ற ஆழ்வார்களுடைய பெருமையை அறிந்தவர்கள் யார்? அவர்கள் அருளிச்செய்த ப்ரபந்தங்களின் பெருமையை அறிந்தவர் யார்? ஆழ்வார்களின் அதிலும் முக்யமாக நம்மாழ்வாரின் அருளைப் பெற்ற ஸ்ரீமந்நாதமுனிகள் தொடக்கமான நம் ஆசார்யர்களைத் தவிர வேறொருவர் இதை உணர்ந்துள்ளனரா என்று நீ ஆராய்ந்து பேசு.
ஆழ்வார்களின் வைபவத்தை நன்றாக அறிந்தவர்கள் நம் ஆசார்யர்களே. ஒரு விஷயத்தை ஒருவர் நன்றாக உணர்ந்தார் என்றால் அதன்படி அவர் நடப்பார். அருளிச்செயல்களுக்கு வ்யாக்யானங்களை அருளி அவ்வாழ்வார்கள் காட்டிய வழியிலே சிறிதும் பிசகாமல் நடந்தவர்கள் நம் பூர்வாசார்யர்களே என்பதில் இருந்தே இவர்களே ஆழ்வார்கள் விஷயத்திலும் அருளிச்செயல்கள் விஷயத்திலும் மிகுந்த தெளிவு பெற்றவர்கள் என்று நாம் உணரலாம்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org