ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆழ்வார்களையும் அருளிச் செயல்களையும்
தாழ்வா நினைப்பவர்கள் தாம் நரகில் வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே எப்பொழுதும் நீ அவர் பால்
சென்றணுகக் கூசித் திரி
முப்பத்தைந்தாம் பாசுரம். கீழே கொண்டாடப்பட்ட ஆழ்வார்கள் மற்றும் அவர்களின் அருளிச்செயல்களின் பெருமைகளை அறிந்து கொள்ளாமல் அவமதிப்பவர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள் என்பதைத் தன் திருவுள்ளத்துக்கு அருளிச்செய்கிறார்.
நெஞ்சே! மிக உயர்ந்தவர்களான ஆழ்வார்களையும் அவர்களின் மிகச் சிறந்த படைப்பான அருளிச்செயல்களையும் தாழ்வாக நினைப்பவர்கள், நரகில் வீழ்வார்கள் என்று நினைத்து, அப்படிப்பட்டவர்கள் அருகில் செல்வதும் அவர்களுடன் பழகுவதும் நமக்குக் கேடு என்று நினைத்து அவர்களிடம் இருந்து விலகிச் செல்.
எம்பெருமானுக்கு மிகவும் ப்ரியமான ஆழ்வார்கள் இவ்வுலகில் அவதரித்து எல்லோருக்கும் உஜ்ஜீவனத்துக்கு வழிகாட்டினார்கள். இவர்களை இவர்கள் பிறந்த குலத்தாலோ அல்லது இவர்கள் பாடிய ப்ரபந்தங்கள் தமிழ் பாஷையில் உள்ளன என்பதாலோ இவர்களைத் தாழ்வாக நினைத்தால், எம்பெருமான் தானே அப்படிப்பட்டவர்களை மன்னிக்காமல் நரகத்திலே தள்ளிவிடுவான். இப்படி இருக்க, நீ அவர்களுடன் எப்படி இருக்க முடியும். ஆகையால் அவர்களைக் கண்டால் அருவருப்புடன் விலகிச் சென்று விடு.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
great explanation this service is very great!