ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
அக்ரே பஸ்சாது பரி பரிதோ பூதலம் பார்ஸ்வதோ மே
மௌலௌ வக்த்ரே வபுஷி ஸகலே மாநஸாம் போருஹே ச|
பஸ்யந் பஸ்யந் வரவரமுநே திவ்யமங்கரித்வயம் தே
நித்யம் மஜ்ஜந்நம்ருத ஜலதௌ நிஸ்தரேயம் பவாப்திம்||
பதவுரை : ஹேவரவரமுநே! – வாரீர் மணவாளமாமுநிகளே, தே – தேவரீருடைய , திவ்யம் – ஆச்சர்யகரமான, அங்ரித்வயம் – திருவடியிணயை, அக்ரே – எதிரிலும், பஸ்சாத் – பின்புறத்திலும், பூதலம் பரித: – பூமியின் நான்கு பக்கங்களிலும், மே பார்வஸ்வத: – அடியேனுடைய இரு பக்கக்கங்களிலும், மௌ லௌ – தலையிலும், வக்த்ரே – முகத்திலும், கிலே வபுக்ஷி – உடலில்லுள்ள எல்லா உறுப்புக்களிலும், மாநஸ அம்போருஹே ச – ஹ்ருதய கமலத்திலும், பஸ்யந் பஸ்யந் (இடையறாத நினைவின் மிகுதியாலே) எப்போதும் ஸ்பஷ்டமாகப் பார்த்துக்கொண்டே, அம்ருத ஜலதௌ – இறப்பவனைப் பிழைப்பூட்டும் அமுதக்கடலில், மஜ்ஜந் – முழ்குமவனாய் கொண்டு, பவாப்திம் நிஸ்தரேயம் – பிறவிக்கடலைத் தாண்ட விரும்புகிறேன்.
கருத்துரை: “குருபாதாம்புஜம் த்யாயேத் குரோரந்யம் நபாவாயேத்” – (ப்ரபஞ்சஸாரம்) [ஆசார்யனுடைய திருவடித்தாமரைகளை த்யாநிக்க வேண்டும். ஆசார்யனைத் தவிர வேறொருவனை நினைத்தல் கூடாது.] என்ற ப்ரமாணம் இங்கு நினைக்கத்தக்கது, ஒரு கடலில் மூழ்கிக் கொண்டே மற்றொரு கடலைத் தாண்டவிரும்பவது ஆச்சர்யமுண்டாக்கலாம், ஆசார்யனுடைய ஆச்சர்யகரமான திருவடிகளை த்யானம் செய்துகொண்டே இருக்கிற பாவநாப்ரகர்ஷத்தின் மஹிமையினியால் எல்லாம் ஸித்திக்குமாகையால், இதில் பொருந்தாமை ஏதுமில்லை என்கிறார் ஆசார்ய பக்தாக்ரேஸராகிய திருமழிசை அண்ணாவப்பய்யங்கார் ஸ்வாமி (வ்யாக்யாதா).
‘பகவதா ஆத்மீயம் ஸ்ரீமத் பாதாரவிந்தயுகளம் ஸிரஸி க்ருதம் த்யாத்வா அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவஸ் ஸூகமாஸீத‘ (எம்பெருமானால் தன்னுடைய பரமபோக்யமான திருவடித்தாமரைகளை தன தலையில் வைக்கப்பட்டதாக த்யாநம் பண்ணி ஆனந்தமாகிற அமுதக்கடலுக்குள்ளே மூழ்கிய எல்லா அவயங்களையும் உடையவானைக் கொண்டு ஸுகமாக இருக்கக்கடவன்) என்று ஸ்ரீ வைகுண்டத்யத்தில் எம்பெருமானார் எம்பெருமான் விஷயத்தில் அருளிச்செய்ததை இவர் இங்கு ஆசார்யரான மாமுனிகள் விஷயத்தில் அருளிச்செய்தார்.
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org