ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
த்வம் மே பந்து ஸ்த்வமஸி ஜநகஸ் த்வ ம் ஸகா தேஸிகஸ் த்வம்
வி த்யா வ்ருத்தம் ஸுக்ருதமதுலம் வித்தமப்யுத்தமம் த்வம்|
ஆத்மா ஶேஷீ பவஸி பகவந் ஆந்தர: ஶாஸிதா த்வம்
யத்வா ஸர்வம் வரவரமுநே! யந்யதாத்மாநுரூபம்||
பதவுரை: ஹே வரவரமுநே -வாரீர் மனவாளமாமுனிகளே த்வம் – தேவரீர் அடியேனுக்கு, பந்து அஸி-விடமுடியாத உறவினர் ஆகிறீர் . த்வம் ஜநக: அஸி – கல்வி கற்பிப்பதனாலே நன்மையைத் தேடும் தமப்பனார் ஆகிறீர், த்வம் ஸகா அஸி-(1)ஆபத்தில் உதவும் தோழராகிறீர் , (2)பகவதநுபவ காலத்தில் துணைவர் ஆகிறீர்: த்வம் தேஸிக : அஸி – அறியாதவற்றை அறிவிக்கும் ஆசார்யன் ஆகிறீர், த்வம் வித்யா அஸி – அவ்வாசார்யார்கள் உபதேஸித்த தாய்போல் காக்கும் வித்யை ஆகிறீர். த்வம் வ்ருத்தம் அஸி – முன்பு கூறிய வித்யையின் | பலனாய நன்மையைத்தரும் நன்னடத்தை ஆகிறீர். த்வம் அதுலம் ஸுக்ருதம் அஸி – (இதுவரையில் கூறிய உறவினர் முதலியோரின் லாபத்துக்கும், மேல் சொல்லப்படும் செல்வம் முதலியவற்றின் லாபத்துக்கும் காரணமான) ஒப்பற்ற புண்யமாக ஆகிறீர். த்வம் உத்தமம் ஸித்தம் அஸி – (ஈட்டும்போதும் காப்பாற்றும் போதும் துன்பத்தைத் தரும் அழியும் செல்வம் போலல்லாமல்) அழியாத உத்தம செல்வமாக ஆகிறீர், த்வம் ஆத்மா அஸி – முற்கூரிய அனைத்தையும் தனக்காக ஏற்றுக்கொள்ளும் ஆத்மாவாக ஆகிறீர், த்வம் ஶேஷீ பவஸி – முற்கூறப்பட்ட ஆத்மாவையும் அடிமைகொள்ளும் தலைவராக ஆகிறீர். ஹே பகவந் – அறிவு ஆற்றல் முதலிய குணங்களை மிகக்கெண்ட மாமுனிகளே, த்வம் ஆந்தரஶ்ஶாஸிதா அஸி – (1)உள்புகுந்து நியமிக்கும் பரமாத்வாக ஆகிறீர், (2)’அந்தர‘ எனப்பட்டபடி பரமாத்மாவையும் நியமிக்கும் ஆந்தரரான ஜ்ஞாநியாக ஆகிறீர், யத்வா – இப்படிப் பலவாராகச் சொல்லிப் பயனென்? ஆத்மஅநுரூபம் – விரோதியைப் போக்குதல், பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யங்களாகிய விரும்பியவற்றைத் தருதல் முதலாக) ஜீவாத்ம ஸ்வரூபத்துக்குத் தக்கதாக, யத்யத் பவதி- எது எது உள்ளதோ, தத்(ஸர்வம்) அஸி-அது எல்லாமுமாகவும் ஆகிறீர்.
கருத்துரை : பத்நாதி இதி பந்து – நம்மை விடாமல் நாம் துன்புற்றபோது துன்புற்றும், இன்புற்றபோது இன்புற்றும் கூடவே இருக்கும் உறவினன் என்றபடி. ஸகா தோழன். நாம் துயருற்றபோது துயரைப் போக்குமவராய் பகவதநுபவம் பண்ணும்போதும், ‘போதயந்த பரஸ்பரம்‘ (கீதை 10- 9) என்று ஒருவருக்கொருவர் பகவத் குணங்களைச் சொல்லுவதற்கும் கேட்பதற்கும் உறுப்பான துணைவர் என்றபடி, ஆத்மா – தான் என்பது அதன் கருத்து ‘தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் ‘ திருவாய்மொழி 3 – 6- 9) என்று ஆழ்வார் ‘நான்‘ அன்று சொல்லவேண்டிய இடத்தில் ‘தான்‘ என்றாரிரே. இதனால் ‘தவம்‘ ஆத்மா அஸி‘ – என்பதற்கு ‘தேவரீர் நானாக ஆகிறீர்‘ என்பது பொருளாகத்தகும். மேலும் ‘ஸேஷி பவஸி, ஆந்தரஸாசிதா பவஸி ‘ என்பவற்றிற்கு – என்னயடிமை கொள்ளுமவரும் என்னையுட்புகுந்து நியமிப்பவரும் (பரமாத்வாகவும்) தேவரீரே ஆகிறீர் என்பது பொருள். ‘ஆந்தர: ஸாஸிதா‘ என்பதற்கு பதவுரையில் கூறிய இரண்டு பொருள்களுக்கும். (1) ஆந்தர: என்பதற்கு அந்தரேபவ : மனத்தில் இருக்கும் பரமாத்மா என்று முதற்பொருள், (2) ‘ஆதமந: அந்தர: (ப்ருஹ . உப 5 -7 – 22) என்றவிடத்தில் அந்தர: என்பதற்கு (ஆத்மாவுக்கு) உள்ளிருக்கும் பரமாத்மா என்று பொருள் கூறப்பட்டுள்ளபடியினால், அந்தரஸ்யா அயம் உள்ளிருக்கும் பரமாத்மாவின் உள்ளும் இருந்து அப்பறமாதவை நியமிக்கும் ஜ்ஞானி‘ என்பது இரண்டாம் பொருள். ‘ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம்‘ (கீதை 7 – 18) (ஜ்ஞாநியோ என்றால் எனக்கு ஆத்மா என்பதே என் கருத்தாகும்) என்று எம்பெருமான் ஜ்ஞாநியை தனக்குள்ளிருந்து தன்னையும் நியமிப்பவனாக அருளிச்செய்தது இதற்கு பிரமாணமாகும். யத்வா = இது முன்பு தனித்தனியே சொன்னவற்றையெல்லாம் தவிர்க்கிறது. இப்படி ஒவ்வொன்றாக இருத்தலைச் சொல்லி கொண்டுபோனால் நூல்விரிவுபடுமென்பதனால். ஆத்மாவுக்குத் தகுந்ததாக உலகில் சுருக்கமாகச் சொல்லி முடித்தருளியபடி.
(இந்த ஸ்லோகத்தில் ‘தவம் ஆத்மா அஸி – (தேவரீர் அடியேனாக ஆகிறீர்) என்று இவர் தமக்கு மாமுநிகளோடு அருளிச்செய்த ஒற்றுமை ஜீவாத்மாக்களைனவரும் ஒன்றே‘ என்று பக்ஷத்தாலல்ல; சேஷ சேஷி பாவத்தாலும், நியந்த்ருதியாம்யபாவத்தாலுமே என்பது ‘மேலே ஸேஷீ பவஸி, ஆந்தர : ஸாஸிதா பவஸி‘ என்றருளிச்செய்வதிலிருந்து ஸ்பஷ்டமாகிறது. இவ்வொற்றுமை தமக்குப் பரமாத்மாவோடு உள்ளமை ஸாஸ்த்ர ஸித்தமாகையாலும் ‘பீதவாடைபிரானார் பிரமகுருவாகி வந்து‘ (பெரியாழ். திரு. 5 – 2- 8) என்கிறபடியே மாமுனிகள் பரமாத்மாவின் அவதாரமாகையாலும்; இவர் தமக்கு அம்மாமுநிகளோடு ஒற்றுமை கூறினாரென்று கருத்தாகும்.)
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org