உத்தர​ திநசர்யை – 10

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<< உத்தர திநசர்யை – 9

யாயா வ்ருத்திர் மநஸி மம ஸா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ தே
யோயோ ஜல்பஸ் ஸ பவது விபோ நாமஸங்கீர்த்தநம் தே|
யாயா சேஷ்டா வபுக்ஷி பகவந்ஸா பவேத் வந்தநம் தே
ஸர்வம் பூயாத் வரவரமுநே! ஸம்யகாராதநம் தோ||

பதவுரை: ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே! மம – முன்செய்த வினைக்கு வசப்பட்ட அடியேனுடைய அறிவானது, ஜாயதாம் – (தந்தம் காரணங்களால்) உண்டாகத்தகுமோ, ஸா வ்ருத்தி: – அந்தந்த அறிவெல்லாம், தே – நினைத்தவுடனே மகிழ்ச்சியூட்டுகிற தேவரீருடைய, ஸம்ஸ்ம்ருதி: – நல்ல நினைவினுருவாகவே, ஜாயதாம் – உண்டாகவேணும், ஹே விபோ – வாரீர் ஸ்வாமியே! , மே – அடியேனுக்கு, யா: யா: ஜல்ப: – எந்தெந்த வார்த்தையானது, ஜாயதாம் – (தந்தம் காரணங்களால்) உண்டாகத்தகுமோ, ஸ: – அவ்வார்த்தையனைத்தும், தே – புகழத்தக்க தேவரீரைப் பற்றியதான, ஜல்ப: – வார்த்தையுருவாகவே, ஜாயதாம் – உண்டாகவேணும். ஹே பகவந் ! – அறிவாற்றர்களால் மிக்கவரே, மம – அடியேனுடைய, வபுக்ஷி – ஏதோவொரு வேலையைச் செய்து கொண்டேயிருக்கும் சரீரத்தில், யா யா சேஷ்டா – அச்செயலெல்லாம், தே – வணங்கத்தக்க தேவரீரைப் பற்றியதான, வந்தநம் – வணக்கவுருவாகவே, ஜாயதாம் – உண்டாகவேணும், ஸர்வம் – இதுவரையில் சொல்லியும் சொல்லாததும் போந்த, (அடியேனுடைய வினையடியாக உண்டாகத்தக்க) செயல்களெல்லாம், தே – தேவரீருடைய, ஸம்யக் ஆராதநம் – ப்ரீதிக்குக் காரணமான நல்ல ஆராதநரூபமாகவே, பூயாத் – உண்டாகவேணும்.

கருத்துரை:

அடியேனுக்கு, முன்செய்ததீவினையின் பயனாக மனத்தில் உண்டாகும் தீயஎண்ணெங்களெல்லாம் தேவரீரருளா ல் மாறி தேவரீரைப் பற்றிய த்யாநமாகவே உண்டாகவேணும், வாயில் வரும் தீயபேச்சுக்களெல்லாம் மாறி தேவரீருடைய நாமஸந்கீர்த்தனமாகவே உண்டாகவேணும். உடலில் உண்டாகும் தீய செயல்களெல்லாம் மாறி தேவரீரைபற்றிய வணக்கமாகவே உண்டாகவேணும் என்று இதனால் ப்ரார்த்தித்தாராயிற்று.

‘ஜாயதாம்’ என்பதனை ஒவ்வொறு வாக்கியத்திலும் இரண்டு தடவை திருப்பிப் பொருள் உரைக்கப்பட்டது. ‘ஜாயதாம்’ என்பது லோட் ப்ரத்யயாந்தமான சப்தம். அதற்குப் பலபொருள்கள் உள்ளன. இங்கு முதலில் அர்ஹம் – தகுதியென்ற பொருளிலும், பின்பு வேண்டுகோள் என்ற பொருளிலும் அச்சொல் ஆளப்பட்டமை பதவுரையில் கூறியது கொண்டு அறிதல் தகும். இங்ஙனமன்றி (ஜாயதாம் என்பதை ஆவ்ருத்தி செய்யாமலேயே) அடியேன் மனத்தினிலுண்டாகும் ஜ்ஞாநமெல்லாம் தேவரீர் நினைவாகவும், வாயில் வரும் சொற்களெல்லாம் தேவரீர் நாமஸங்கீர்த்தனமகவும், தேஹத்தில் தோன்றும் செயல்களெல்லாம் தேவரீர் திருவாராதநமாகவும் உண்டாகவேணும் – என்றும் பொருள் தகும்.

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment