ப்ரமேய ஸாரம் – நூன் முகவுரை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

தனியன்

Ramanuja_Sriperumbudurஎம்பெருமானார்

arulalaperumalemperumanar-thirupadagamஅருளாளப் பெருமாள் எம்பெருமானார்

நூல் தோற்றுவாய்

அனைத்து வேதம் முதலிய நூல்களிலும் நுண்ணறிவு உடையராய் மெய்ப்பொருள் பற்றியும் மெய்ப்பொருளை அடைவதற்கான செந்நெறி பற்றியும் அடைய வேண்டிய பயன் பற்றியும் உண்மையை உள்ளது உள்ளபடி அரிந்தவர்களில் முதல்வராய் இருப்பவரும் , பிறப்பிறப்புகளில் சுழன்று வரும் அறிவுடைய ஆன்மாக்கள் எல்லோரும் வீடுபேறு அடையவேணும் என்னும் அவாவுடையராயிருப்பவரும் தம்மை ஆதியில் சீடராய் ஏற்றுக்கொண்ட எம்பெருமானார் திருவடிகளிலேயே நீண்ட நாள் (சுமார் 80 ஆண்டுகள்) பணிவிடை செய்து (தத்துவம், ஹிதம், புருஷார்த்தம் ) மெய்ப்பொருள், நெறி,பயன் இவற்றின் சிறப்புக்களை எல்லாம் அவர் அருளிச் செய்யக் கேட்டு அறின்து அவ்வொழுக்கத்தின் எல்லை நிலத்தில் நிலை நிற்பவரும் , அதாவது தத்துவம்-இறைநிலை,ஹிதம்-இறைவனை அடைவற்கான தக்க வழி , புருஷார்த்தம்- வாழ்வு இவற்றின் உண்மை . இதனைத் “தலஸ்பர்ஸ ஞானம்” என்பர். தலம் என்றால் பூமி. ஸ்பர்ஸம் என்றால் தொடுதல். நீர் நிலைகளில் இறங்குபவன் அதன் அடித்தலத்தில் சென்று மண்ணை எடுத்து வருவான். அதுபோல் அறிவுக்கடலில் முழுகித் திலைக்கும் இவர் அறிவின் எல்லையைக் கண்டவரென்று இவருடைய அறிவின் கூர்மை சொல்லப்படுகிறது. இறைவனைப் பற்றி அறிவது அதனுடைய முதல் நிலை.அடியார்களைப் பற்றி அறிவது அதனுடைய எல்லை நிலை. அடியார்கள் வரையிலும் அடியவராய் இருத்தல் என்பது கருத்து. வாழ்வாங்கு உணர்ந்தவர் என்பதாம். இவாறு அறிய வேடியவற்றை முழுமையாக அறிந்தவருமான அருளாளப்பெருமாள் எம்பெருமானார் தம்முடைய மிக்க கருணையாலே பிறவிப் பெருங்கடலில் உழலுல் உயிர்கள் வீடு பேறு அடைவதற்காக வேதம் முதலிய அனைத்து நூல்களில் இருந்தும் ஓரோர் இடத்திலுள்ள கருத்துக்களை அதாவது எல்லோருக்கும் அறிவதற்கு முடியாதபடி இருக்கிற அவ்வரும் பொருள்களைச் சுருக்கி “ஞான சாரம்” என்கிற நூல் மூலமாக இயற்றி முடித்த பிறகு “பிரமேய சாரம்” என்னும் இந்நூலை இயற்றுகிறார்.

வேதம் என்பது “எழுதாமறை” என்று கூறப்படும். மிகப் பழமையான சாஸ்திரம். இறைவனைப் போல அதுவும் அநாதியாக வந்து கொண்டிருப்பது. அதற்குப் பிரமாணம் என்று பெயர். அதனுடைய அனைத்துக் கருதுக்களையும் சுருக்கமாக எடுத்துரைப்பது “திருமந்திரம்” அதாவது எட்டெழுத்து மந்திரம். (ஓம் நமோ நாராயணாய) என்பது. அதில் சொல்லப்படும் கருத்துக்களின் திரண்ட பொருளைச் சுருக்கி இந்நூலில் கூறப்படுகிறது.ஆகையினால் இந்நூலுக்கு பிரமேயசாரம் என்னும் பெயர் கொடுக்கப்பட்டது.

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment