உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 68

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 67

நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்

ஆத்திக நாத்திகருமாம் இவரை ஓர்த்து நெஞ்சே

முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச்

சொன்னவரை நாளும் தொடர்

அறுபத்தெட்டாம் பாசுரம். யாரைப் பின்தொடர வேண்டும் யாரைக் பின்தொடரக் கூடாது என்னும் விஷயங்களை அருளிச்செய்கிறார்.

நெஞ்சே! சாஸ்த்ரத்தை ஒத்துக்கொள்ளாத நாஸ்திகரும், உயர்ந்ததான வேத சாஸ்த்ரத்தில் காட்டப்பட்டுள்ள நல்ல வழிகளை ஒத்துக்கொண்டு அதன்படி நடக்கும் ஆஸ்திகரும், மேலோட்டமாக சாஸ்த்ரத்தை ஒத்துக்கொண்டு அதிலே விச்வாஸமும் இல்லாமல் அதன் வழியில் நடக்காமலும் இருக்கும் ஆஸ்திக நாஸ்திகர்கள் என்று இருக்கும் மூன்று வகையான மக்களை நன்றாக ஆராய்ந்து பார்த்து, முதலில் சொல்லப்பட்ட நாஸ்திகரும் இறுதியில் சொல்லப்பட்ட ஆஸ்திக நாஸ்திகரும் மூர்க்கர் என்று அவர்களை விட்டு, நடுவிலே சொல்லப்பட்ட ஆஸ்திகரையே எப்பொழுதும் பின்தொடர்ந்து நடக்கவும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment