ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
எறும்பி அப்பா அருளிய தனிப்பாசுரம் – இறுதியில் சேவிக்கப்படுவது வழக்கம்
மன்னுயிர்காள் இங்கே மணவாள மாமுனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை – உன்னிச்
சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன்
நிலை பெற்ற உலகத்தில் இருப்பவர்களே! இந்த ஸம்ஸார மண்டலத்திலேயே மணவாள மாமுனிகளின் திருவடிகளான பொன்னடியாம் செங்கமலப் போதுகளை ஆசையுடன் சிந்தித்து, உங்கள் தலையிலே வைத்துக் கொண்டால், இந்த தேஹத்தின் முடிவிலேயே, அர்ச்சிராதி மார்க்கத்திலே சென்று, வ்ரஜா நதியைக் கடந்து, அமானவ புருஷனும் உங்களைத் தீண்டுவதைத் தலையாய கடமையாகச் செய்ய, திவ்யமான சரீரத்தைப் பெற்று, ஆனந்தத்துக்கு எல்லை இல்லாத தேசமான ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் திருமாமணி மண்டபத்துள் சென்று எம்பெருமானால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அடியார் குழாங்களுடன் கூடி இருந்து நித்ய கைங்கர்யத்திலே எப்பொழுதும் இருப்பீர்கள்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org