ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
தீய கந்தம் உள்ளதொன்றைச் சேர்ந்து இருப்பதொன்றுக்குத்
தீய கந்தம் ஏறும் திறம் அது போல் – தீய
குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக்
குணம் அதுவேயாம் செறிவு கொண்டு
எழுபதாம் பாசுரம். விட வேண்டியவர்களான ப்ரதிகூலர்களுடன் ஏற்படும் தீமையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கி அருளுகிறார்.
துர்நாற்றத்துடன் கூடியிருக்கும் ஒரு பொருளுடன் கூடினால் அந்த துர்நாற்றத்தைத் தானும் பெறுவதைப்போலே ரஜோ தமோ குணம் கொண்டவர்களுடன் கூடியிருந்தால், அந்தச் சேர்க்கையினாலேயே தீய குணமானது ஏற்படும்.
பகவத் பாகவத ஆசார்ய பக்தி இல்லாதவர்களுடன் நாம் பழகினால், நம்மிடம் இருக்கும் பகவத் பாகவத ஆசார்ய பக்தியும் குறைந்துவிடும். பகவத் பாகவத ஆசார்ய விஷயத்தில் அபசாரப்படுபவர்களுடன் பழகினால் நாமும் அவ்வாறு அபசாரப்படத் தொடங்கிவிடுவோம். இது இயற்கையே. இவற்றை உணர்ந்து அப்படிப்பட்டவர்களுடன் பழகாமல் இருப்பதே ஆத்மாவுக்கு நலம். இதுவே நம் ஆசார்யர்கள் காட்டிய வழி.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org