உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 64

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 63

தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது அவன்

இந்நாடு தன்னில் இருக்கும் நாள் அந்நேர்

அறிந்தும் அதில் ஆசை இன்றி ஆசாரியனைப்

பிரிந்திருப்பார் ஆர் மனமே பேசு 

அறுபத்துநான்காம் பாசுரம். ஆசார்யனே ப்ராப்யம், அதாவது அடைந்து அனுபவிக்க வேண்டிய விஷயம் என்று உணர்ந்தாலும், சிஷ்யனுக்கு ஆசார்யனைப் பிரிய வாய்ப்பில்லை என்று தன் நெஞ்சுக்கு அருளிச்செய்கிறார்.

நெஞ்சே! சிஷ்யன் தன்னுடைய ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்யக் கூடிய பாக்யம் ஆசார்யன் இவ்வுலகில் இருக்கும் வரையே என்பதை நன்றாக உணர்ந்தபின்பும் அதிலே ஆசை இல்லாமல் எந்த சிஷ்யன் தன் ஆசார்யனைப் பிரிந்திருப்பான்? நீயே கூறு!

இவ்வுலகில் ஆசார்யன் இருக்கும் காலம் வரையே ஒரு சிஷ்யன் தன் ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய முடியும். ஆசார்யன் பரமபதத்துக்கு எழுந்தருளிவிட்டால், நேரே ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பை இழந்து விடுவான் சிஷ்யன். ஆகையால், இருக்கும் காலம் வரை, ஆசார்ய கைங்கர்யத்திலே ஈடுபட்டிருக்க வேண்டும். சென்ற பாசுரத்தின் விளக்கவுரையிலே பார்த்தபடி, மாமுனிகள் இதைப் பூர்த்தியாக அனுஷ்டித்தார். நம் ஆசார்யர்களும், இவ்வாறு ஆசார்ய கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment