உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 63

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 62

ஆசாரியன் செய்த உபகாரமானவது

தூய்தாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் தேசாந்தரத்தில்

இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது

இருத்தல் இனி ஏதறியோம் யாம் 

அறுபத்துமூன்றாம் பாசுரம். ஆசார்யன் செய்யும் பேருதவியையும் அதற்கு சிஷ்யன் நன்றியுடன் இருக்க வேண்டிய இருப்பையும் அருளிச்செய்கிறார்.

ஆசார்யன் செய்த உதவியானது குற்றமற்றது என்று தன்னுடைய மனத்திலே ஒரு சிஷ்யன் உணர்ந்தான் என்றால் ஆசார்யனுக்குக் கைங்கர்யத்தில் ஈடுபட முடியாத இடத்தில் இருப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது. இப்படி ஆன பின்பு, ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய முடியாத இடத்தில் சிலர் இருக்கிறார்களே, அது ஏன் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.

ஆசார்யன் சிஷ்யனுக்கு ஞானத்தை அளிப்பது, தவறுகள் செய்தால் திருத்துவது, கைங்கர்யங்களில் ஈடுபடுத்துவது, மோக்ஷத்தையே பெற்றுத் தருவது போன்ற பல உதவிகளைச் செய்கிறான். நல்ல சிஷ்யனானவன் இவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்து, எப்பொழுதும் ஆசார்யனிடம் நன்றியுடன், ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்வதிலேயே ஈடுபட்டிருக்க வேண்டும். மாமுனிகள் தாமும், தன்னுடைய ஆசார்யனான திருவாய்மொழிப் பிள்ளை இவ்வுலகில் வாழ்ந்த நாள் வரை, ஆழ்வார்திருநகரியிலேயே இருந்து, தன் ஆசார்யன் இட்ட கைங்கர்யத்தைச் செய்து வந்தார். திருவாய்மொழிப் பிள்ளை திருநாட்டுக்கு எழுந்தருளிய பின்பே, இவர் திருவரங்கத்துக்குச் சென்றார். ஆக, இவர் தான் நடத்திக் காட்டியதையே மற்றவர்களுக்கும் உபதேசிக்கிறார்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment