ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
சச்சம்பிரதாயம் தாம் உடையோர் கேட்டக்கால்
மெச்சும் வியாக்கியைகள் உண்டாகில் – நச்சி
அதிகரியும் நீர் வசன பூடணத்துக்கற்ற
மதியுடையீர் மத்தியத்தராய்
ஐம்பத்தெட்டாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தின் உயர்ந்த அர்த்தங்களை எவ்வாறு கற்றுக் கொள்வது என்று கேட்பவர்களுக்குத் தகுந்த பதிலை அருளிச்செய்கிறார்.
ஸ்ரீவசன பூஷணத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட மதியைப் பெற்றவர்களே! இதற்கு எல்லோராலும் புகழப்படும்படியான வ்யாக்யானங்களை எவரேலும் அருளியிருந்தால், அவற்றை ஸத் ஸம்ப்ரதாயத்திலே நிஷ்டையுடன் இருப்பவர்கள் கேட்டு மகிழ்ந்தால், நடு நிலைமை உடையவராக இருந்து நீங்களும் இதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
இதற்கு மாமுனிகள் மிகச்சிறந்ததான ஒரு வ்யாக்யானம் அருளிச்செய்வதற்கு முன்பே திருநாராயணபுரத்து ஆயி ஜநந்யாசார்யர் முதலானோர் வ்யாக்யானம் அருளியுள்ளனர்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org