ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தை தன்னில்
மாசறவே ஊன்ற மனனம் செய்து – ஆசரிக்க
வல்லார்கள் தாம் வசன பூடணத்தின் வான் பொருளைக்
கல்லாததென்னோ கவர்ந்து
ஐம்பத்தேழாம் பாசுரம். இந்த உயர்ந்த க்ரந்தத்தின் பெருமையை அறிந்தும் அதில் ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்களின் துயர நிலையை நினைத்து வருந்துகிறார்.
ஆசார்யர்களிடத்தில் கற்றுக்கொள்ளப்பட்ட சீரிய அர்த்தங்களை நன்றாகச் சிந்தனை செய்து, தங்களுடைய மனத்திலே இருக்கும் காம க்ரோதங்கள் ஆகிய தோஷங்களைப் போக்கிக்கொண்டு, அந்த அர்த்தங்களை அனுஷ்டிப்பதற்கு ஏற்ற யோக்யதையை உடையவர்கள், ஸ்ரீவசன பூஷணத்தின் உயர்ந்த அர்த்தங்களை கற்காமல் இருப்பதற்குக் காரணம் என்னவோ? இவர்கள் சாஸ்த்ரத்தைக் கற்று அனுஷ்டிக்க வல்ல மனுஷ்ய ஜந்மத்தில் பிறந்தும் இதிலே ஆசை இல்லாததால் இதை இப்படி இழந்து போகிறார்களே!
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org