ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<< உத்தர திநசர்யை – 13
திநசர்யாமிமாம் திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந:|
பக்த்யா நித்யமநுத்யாத்யாயந் ப்ராப்நோதி பரமம் பதம்||
பதவுரை: இமாம் – ‘பரேத்யு: பஸ்சிமேயாமே’ (பூர்வதிநசர்யை 14) என்று தொடங்கி ‘ஸயானம் ஸம்ஸ்மராமி தம்’ என்ற முன் ஸ்லோகமீறாக அநுஸந்திக்கப்பட்டதும், ‘திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந திநசர்யாம் – அழகியமணவாளமாமுனிகளின் நித்யானுஷ்டாநங்களை தெரிவிக்கிற இந்த கிரந்தத்தை, நித்யம் – தினந்தோறும் (இரவும், பகலும்) பக்த்யா அநுத்யாத்யாயந் – பக்தியோடு தொடர்ந்து அநுசந்திக்கிற மனிதன், பரமம் பதம் – இனி இதுக்குமேலில்லை என்னும்படி மிகவுயர்ந்த ஸ்ரீவைகுண்டலோகத்தை, பராப்நோதி – அடைகிறான்.
கருத்துரை: முடிவில் திநசர்யை என்ற இந்த கிரந்தந்தை அனநுசந்தித்தால் உண்டாகும் பிரயோஜனத்தை அருளிச்செய்கிறார் இந்த ஸ்லோகத்தினால் பூர்வதினசர்யையில் முதலில் பதின்மூன்றாம் ஸ்லோகம் வரையில் உபோத்காதமென்று முன்னமே சொல்லப்பட்டது. அதில் 14வது ஸ்லோகம் முதற்கொண்டு இவ்வுத்தர திநசர்யையில் 13ம்ஸ்லோக வரையிலுமே வரவர முநி திநசர்யை என்று என்ற நூலாகக்கொள்ளபட்டது. ‘திவ்யாம்’ என்பதற்கு திவ்யமான (மிகவுயர்ந்த) பாஞ்சராத்ராகமம் முதலிய ஸாஸ்த்ர ஸித்தங்களான அநுஷ்டானங்களைக்கூறும் நூல் என்னும் பொருளேயன்றி திவ்யமான – பரமபதத்திய என்று பொருள் கொண்டு, இவ்வுலகில் நடைபெறாதவையாய் பரமபதத்தில் மட்டும் நடைபெருமவைகளான பாஞ்சசாலிக (ஐந்து காலங்களில் செய்யவேண்டிய) அநுஷ்டானங்களை தெரிவிப்பதான நூல் என்னும் பொருளும் கொள்ளலாம். இந்த அநுஷ்டானங்கள் மிகவும் துர்லபங்களென்றவாறு பரமைகாந்திகளுடைய இவ்வநுஷ்டான ரூபமான தர்மமானது க்ருதயுகத்தில் பூரணமாகவே (குறைவின்றியே) நடக்கும். த்ரேதத்வாபர யுகங்களில் சிறிது சிறிதாய் குறையும்; கலியுகத்தில் இருக்குமோ இராதோ தெரியவில்லை என்று பரத்வாஜபரிஸிஷ்டத்தில் கூறியது கொண்டு இதன் அருமை விளங்கும். மேலும் பற்பல ஆசைகளோடு சேர்ந்த அறிவையுடையவர்களும் அது காரணமாக பற்பல தேவதைகளை அராதிப்பவர்களுமான மனிதர்கள், கலியுகத்தில் திருமாலொருவனையே தெய்வமாக கொள்ளும் இந்த தர்மத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அறிவு படைத்த வித்வான்களாயிருப்பர். எம்பெருமானைபற்றியதான இவ்வுயர்ந்த நெறியை அறிந்துவைத்தும், கலியின் கொடுமையினால், மோகமடைந்து, இதனை அறிவதற்கு முன்புள்ள தங்களது தீயநெறியை விட்டொழிக்க வல்லவராகமாட்டார். கலியிலும் கூட சிலவிடத்தில் ஒரு சிலர் எம்பெருமனொருவனையே பற்றுமவர்கள் உண்டாக போகிறார்கள். அனால் கேட்ட நோக்கமுடைய புறச்சமயிகள் தங்களுடைய கெட்டயுக்திகளாலே அவர்களையும் மயக்கிவிட போகிறார்கள் என்று அதே நூலிலுள்ளும் காணத்தக்கது.
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
Wonderful explanation.
SWAMI pallandu vazga